திருவரங்கத்தந்தாதி 34 அரங்கா ! என்னை ஏசும் சிறையில் அடைத்திடேல் !
அம்புவிலங்கைநகர்பாழ்படச்சங்குமாழியும்விட்டு
அம்புவிலங்கைகொண்டாயரங்காவன்றிடங்கர்பற்றும்
அம்புவிலங்கையளித்தாயினியென்னையாசையென்றிய்-
அம்புவிலங்கையிட்டேசுஞ்சிறையிலடைத்திடலே
பதவுரை : அம் + புவி + லங்கை
= அம்பு + வில் + அம் + கை
= அம்பு + விலங்கை
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
அம் புவி அழகிய பூமியில்
லங்கை நகர் பாழ் பட இலங்கை அரக்கர்கள் அழியும்படி
சங்கும் ஆழியும் விட்டு சங்கு சக்கரங்கள் இல்லாமல்
அம்பு வில் அம்பையும் வில்லையும்
அம் கை கொண்டாய் அழகிய கைகளில் கொண்டவனே !
அரங்கா ரங்க நாதனே !
அன்று முன்பு
அம்பு தண்ணீரில்
இடங்கர் பற்றும் முதலை பிடித்துக்கொண்ட
விலங்கை யானையை
அளித்தாய் பாதுகாத்தவனே !
இனி இனி மேல்
என்னை அடியேனை
ஆசை என்று இயம்பு ஆசை என்று சொல்லப்படும்
விலங்கை இட்டு விலங்கை பூட்டி
ஏசும் சிறையில் பிறர் இகழும் சிறையில்
அடைத்திடேல் அடைக்க வேண்டாம் !
Bookmarks