திருவரங்கத்தந்தாதி 35 அமலைக்கு இறைவா ! அம் அலைக்கும் உலகு உன் உள்ளே !

இடவமலைக்கும்புயங்கமலைக்குமிலங்குமகல்
இடவமலைக்குமிருங்கமலைக்குமிறைவசங்க
இடவமலைக்கும்புனலரங்காவெய்த்தமார்க்கண்டன்கண்டு
இடவமலைக்குமுலகழியாதுள்ளிருந்த்தென்னே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

இடவமலைக்கும் ரிஷபகிரியான திருமாலிருஞ்சோலை மலைக்கும்
புயங்கமலைக்கும் சேஷகிரியான திருவேங்கட மலைக்கும்

இலங்கும் விளங்கும்
அகல் இடம் விசாலமான பூமிக்கு தேவதையான பூமி தேவிக்கும்
இரும் கமலைக்கும் பெரிய தாமரையில் இருக்கும் ஸ்ரீ தேவிக்கும்
இறைவ தலைவனே !
சங்கம் இடவ சங்கத்தை இடக்கையில் உடையவனே !
மலைக்கும் புனல் மோதுகின்ற காவிரி நீர் பாயும் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள
அரங்கா ரங்கநாதா !
எய்த்த மெலிவடைந்த
மார்க்கண்டன் மார்க்கண்டேய முனிவன்
கண்டிட பார்க்குமாறு
அம் அலைக்கும் உலகு பிரளய நீரால் அழிக்கப்பட்ட உலகங்கள்
அழியாது அழியாமல்
உள் இருந்து உன் வயிற்றில் இருந்தது
என்னே என்ன ஆச்சரியம் !