திருவரங்கத்தந்தாதி 36 அற்பர் அரங்கற்கு அன்பாய் இருக்கிலரே !

இருந்தையிலங்கவெளிறுபடாதென்செய்தாலுநிம்பத்து
இருந்தையிலந்தித்திதயாதவைபோற்புல்லர்யாவுங்கற்றாய்ந்து
இருந்தையிலம்பன்னகண்ணார்க்கல்லால்வெண்ணெயில்லில்லொளித்து
இருந்தையிலங்கையரங்கற்கன்பாகியிருக்கிலரே

பதவுரை :


என்செய்தாலும் என்ன தான் செய்தாலும்
இருந்தை கரியானது
இலங்க விளங்கும்படி
வெளிறு படாது வெண்மை ஆகாது ;
நிம்பத்து இரும் தையிலம் கசப்பான வேப்பெண்ணெய்
தித்தியாது இனிமை பெறாது ;
அவை போல் அதே போல
புல்லர் அற்பர்கள்
யாவும் கற்று எல்லாவற்றையும் படித்து
ஆய்ந்து இருந்து ஆராய்ந்திருந்தாலும்
ஐயில் அம்பு அன்ன கூரிய அம்பு போன்ற
கண்ணார்க்கு அல்லால் கண்களை உடைய பெண்களை விட்டு விட்டு ,
இல்லில் ஒளித்து இருந்து வீட்டில் மறைந்து உட்கார்ந்து
வெண்ணெய் வெண்ணெயை
ஐயில் அம் கை எடுத்து உண்ட அழகிய கைகளை உடைய
அரங்கர்க்கு ங்கநாதரிடம்
அன்பாகி இருக்கிலரே அன்பாக இருக்க மாட்டர்கள் !