Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 37 எட்டுழுத்தை எண்ணாம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 37 எட்டுழுத்தை எண்ணாம

    திருவரங்கத்தந்தாதி 37 எட்டெழுத்தை எண்ணார் விண்ணகர் நண்ணார் !

    இருக்குமந்தத்திலறியாவரங்கன்மண்ணேழுண்டுந்தய்-
    இருக்குமந்தத்திருவாய்மலர்ந்தானெட்டுழுத்தைக்குறி-
    இருக்குமந்தப்புத்தியீர்த்துநல்வீடெய்தலாகுங்கைபோய்-
    இருக்குமந்தச்செவிட்டூமன்முன்னீர்கடந்தேறிடிலே !

    பதவுரை :

    இருக்கும் ரிக் முதலிய வேதங்களும்
    அந்தத்தில் அதன் முடிவான உபனிஷத்துகளும்
    அறியா அறிய முடியாத
    அரங்கன் ரங்கநாதனும் ,
    மண் ஏழு உண்டும் ஏழு உலகங்களை உண்டபிறகும்
    தயிருக்கும் தயிரையும் சாப்பிடுவதற்காக
    அந்தத்திருவாய் தனது அழகிய வாயை
    மலர்ந்தான் திறந்தவனுமான மஹாவிஷ்ணுவின்
    எட்டு எழுத்தை அஷ்டாக்ஷரத்தை
    குறியிருக்கும் நினைக்காத நீங்களும்
    மந்த புத்தி ஈர்த்து கூர்மை இல்லாத அறிவை ஒழித்து
    நல வீடு எய்தல் ஆகும் சிறந்த முக்தியை அடையக் கூடும் ;
    கை போய் இருக்கும் கைகள் இல்லாத முடவனும்
    அந்தன் செவிடு ஊமன் குருடனும், செவிடனும், ஊமையுமான ஒருவன்
    முந்நீர் கடந்து ஏறிடில் கடலைத் தாண்டி அக்கரை சென்று விட்டால் !

    Last edited by sridharv1946; 26-06-13, 19:19.
Working...
X