Announcement

Collapse
No announcement yet.

பெரியவரும் ஆங்கிலமும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெரியவரும் ஆங்கிலமும்

    பெரியவரும் ஆங்கிலமும்

    மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா
    பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.
    அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது.நூறு வருடத்துக்கு
    முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக
    ஆங்கிலத்தில் உரையாடுவார்.

    ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம்
    சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங்
    செக் ஷன் வந்தது. அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப்
    பிரயத்தனப்பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை
    ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே
    என்று நினைத்தார்.

    தெரிந்தவரை சொல்லிக் கொண்டிருந்தவரைப்
    பெரியவா, "பிளேன் மேலே பறக்கும்போது காதைத் துளைக்கும்படியா
    ஒரு சத்தம் வரதே அது கேட்டுண்டேதான் இருக்குமா? என்று கேட்க
    "ஒரு குறிப்பிட்ட லெவல் வரைதான் கேட்கும். அதற்கு மேலே போயிட்டா
    விமானச் சத்தம் கேட்காது!" என்றார். அந்தப் பொறியாளர்.

    "ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!" என்று பெரியவர்
    சொல்ல...பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
    'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே..
    இவருக்கு போயா ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேன்!'
    என்று வெட்கினார்.


    இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.
    "இப்போ எதில் இருக்கே?" என்று கேட்கிறார் பெரியவர்.
    அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு,
    "அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!"
    என்றார்.

    "Computer Stationery-தானே நீ சொன்னது?" என்று
    பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.எந்த மொழியை
    எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழங்கால் கண்டவராயிற்றே.


    Source:harikrishnamurthy

Working...
X