Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 38 ஏறும் கரியும் செற்ற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 38 ஏறும் கரியும் செற்ற

    திருவரங்கத்தந்தாதி 38 ஏறும் கரியும் செற்றானை ஏத்தினால் வினை ஏறும் கரியும் !


    ஏறுங்கரியும்பரியும்செற்றான்பரனென்றுமன்றுள்
    ஏறுங்கரிமறையாதலினாலையம்யாதுமக்கீடு
    ஏறுங்கரியவரங்கற்கன்பாய்வினையென்னுமிடி
    ஏறுங்கரியுமினிமேற்பிறவியிடரில்லையே

    பதவுரை : ( கரி - யானை / சாக்ஷி / கருமை / அழியும் ! )

    ஏறும் (ஏழு) காளைகளையும்
    கரியும் (குவலயாபீடம் ) யானையையும்
    பரியும் (கேசி) குதிரையையும்
    செற்றான் வென்றவனான திருமால்
    பரன் என்று மேலான இறைவன் என்று
    மன்றுள் ஏறும் நியாய சபையால் ஏற்றுக்கொள்ளும்படியான
    கரி சாக்ஷி
    மறை வேதம் ஆகும் .
    ஆதலினால் ஆகையால்
    உமக்கு உங்களுக்கு
    ஐயம் யாது சந்தேகம் என்ன ?
    கரிய அரங்கர்க்கு கரிய நிறமுடைய ரங்கநாதருக்கு
    அன்பர் ஆய் அடியவர்கள் ஆகி
    ஈடேறும் வாழுங்கள் !
    வினை என்னும் இடி கருமமாகிய பேரிடி
    கரியும் அழிந்து போகும் !
    இனிமேல் பிறவி இடர் இல்லை இனி பிறப்புத் துன்பம் இல்லை !


    Last edited by sridharv1946; 26-06-13, 20:51.
Working...
X