திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினே !
கண்டகனாவின்பொருள்போல்யாவும்பொய் காலநென்னுங்-
கண்டகனாவிகவர்வதுவேமெய்கதிநல்கெனக்-
கண்டகனாவிப்பொழுதேசெல்கென்றருள்காரரங்கற்-
கண்டகனாவின்புறக்கண்டுவாழ்த்திக்கடிதுய்ம்மினே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை : கண்ட + கனா
கண்டகன் (எமன்) / கண்டாகர்ணன் )
கண் + தக + நா
யாவும் செல்வம் இளமை முதலிய எல்லாமும்
கனாவில் கண்ட கனவில் பார்த்த
பொருள் போல பொய் பொருள்கள் போல பொய்யானது ஆகும்.
காலன் எனும் கண்டகன் யமன் எனும் கொடியவன்
ஆவி கவர்வதுவே மெய் உயிரைத் திருடி எடுப்பதே உண்மை
கதி நல்கு என ஆதலால் "எனக்கு உயர்ந்த கதியைக் கொடு" என்று கேட்டவுடன்
கண்டகனா "கண்டாகர்ணா !
இப்பொழுதே செல் இப்பொழுதே பரமபதம் செல் "
என்று அருள் என்று அருள் செய்த
கார் அரங்கன் கொடையில் கரு மேகம் போன்ற ரங்கநாதனை
கடிது விரைவில்
கண் தக கண்டு கண்கள் மகிழும்படி தரிசித்தும்
நா இன்புற வாழ்த்தி நாக்கு மகிழும்படி துதித்தும்
உய்ம்மின் வாழுங்கள் !
Bookmarks