திருவரங்கத்தந்தாதி - முன்னுரை !
இயற்றியவர் : திவ்ய கவி அழகிய மணவாள தாசர்
(பிள்ளை பெருமாள் ஐயங்கார் )


இவர் எழுதிய நூல்கள் :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends1. திருவரங்கக் கலம்பகம்
2. திருவரங்கத்து மாலை
3. திருவரங்கத்து அந்தாதி
4. சீரங்க நாயகர் ஊசல்
5. திரு வேங்கட மாலை
6. திரு வேங்கடத்து அந்தாதி
7. அழகர் அந்தாதி
8. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி


இவற்றிற்கு "அஷ்ட ப்ரபந்தம்" என்று பெயர். அஷ்ட ப்ரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும் .


பிறந்த ஊர் : சோழ நாட்டில் திரு மங்கை ( ஸ்ரீ வைஷ்ணவ பிராம்மணர் )
திருவரங்கத்து அமுதனாரின் பேரன்


ஆச்சாரியார் : கூரத்தாழ்வானின் திருக்குமாரர் பராசர பட்டர்


சிறப்பு : திரு வேங்கடமுடையான் இவர் வாயால் தமக்கும் ஒரு ப்ரபந்தம் வேண்டும் என்று விரும்பி இவர் கனவில் தோன்றிக் கட்டளையிட , "அரங்கனை பாடிய வாயால் மற்றோர் குரங்கனைப் பாடேன் " என மறுத்தார் .
பின்னர் மனம் திருந்தி அவரை துதித்தவுடன் திருவரங்கக் கோவிலிலே (சலவைக்கல் மண்டபத்தில் ) இவருக்கு முன்னால் எழுந்தருளி அருள் செய்தார்.