திருவரங்கத்தந்தாதி 43 அரங்கரைக் கருதினால் அறம் கிடைக்கும் !
கடிக்கும்பணிநஞ்சமுதாகுந்தீங்குநன்காகும்பராக்-
கடிக்கும்பணியலர்தாழ்வார்கல்லாமையுங்கற்றமையாங்-
கடிக்கும்பணியறமெல்லாமரங்கர்பைங்கன்னித்துழாய்க்-
கடிக்கும்பணியொளிக்குந்நல்லபாதங்கருதினார்க்கே
பதவுரை :( கடிக்கும் - பல்லால் கடிக்கும் / மணம் வீசும் / கிடைக்கும் )
( பணி - பாம்பு / வணக்கம் / தொண்டு / ஆபரணம் )
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
அரங்கர் ரங்கநாதருடைய
பைங்கன்னி துழாய் பசுமையான,இளமையான திருத்துழாய்
கடிக்கும் மணம் வீசுகின்றதும்
பணி ஒளிக்கும் ஆபரணங்கள் பளபளக்கின்ற
நல்ல பாதம் அழகிய திருவடிகளை
கருதினார்க்கு நினைத்தவர்களுக்கு
கடிக்கும் பணி நஞ்சு கடிக்கின்ற பாம்பின் விஷம்
அமுதாகும் அமுதம் ஆக மாறி விடும்
தீங்கு நன்கு ஆகும் தீமைகள் நன்மையாக மாறும்
பராக்கு அடிக்கும் அலக்ஷ்யம் செய்து
பணி அலர் பணியாத பகைவர்களும்
தாழ்வார் பணிந்து வணங்குவார்
கல்லாமையும் படிக்காத விஷயங்களும்
கற்றவை ஆம் தெளிவாக விளங்கும்
பணி அறம் எல்லாம் கைங்கர்ய தருமங்கள் எல்லாம்
கடிக்கும் கிடைக்கும்
Bookmarks