திருவேங்கடத்தந்தாதி 46 அரங்கர் அடியே அக்கரை சேர்க்கும் வங்கம் !
சென்மந்தரங்கங்கருமஞ்சுழிபிணிசேலினங்கு
சென்மந்தரங்கதிர்பொன்கோள்கண்மாரிதிண்கூற்றசனி
சென்மந்தரங்கவற்றுள்விழுவோர்கரைசேர்க்கும்வங்கஞ்-
சென்மந்தரங்கவின்றொளாரரங்கர்திருப்பதமே
பதவுரை : சென்மம் + தரங்கம் ( பிறப்பு அலை கடல் )
செல் + மந்தர் +அங்கு (சேரும் மனிதர் அங்கு )
செல் + மந்தரம் (மேகம் செல்லும் மந்தர மலை )
சென்மம் மாறி மாறி வரும் பிறப்புகள்
தரங்கம் மாறி மாறி வரும் அலைகளுடைய கடல் ஆகும்
கருமம் உயிர்களைப பிறப்பில் சுழல வைக்கும் ஊழ்வினை
சுழி பொருட்களை சுழல வைக்கும் நீர்ச்சுழியாகும்
பிணி வருத்துகிற தேக மற்றும் மனோ வியாதிகள்
சேல் வருத்தும் மீன்கள் ஆகும்
குசென் செவ்வாயும் ,
மந்தர் சனியும் ,
அம் கதிர் சந்திரனும் , சூரியனும் ,
பொன் பிருஹஸ்பதியும் ,
கோள்களும் மற்ற கிரகங்களும் ,
மாரி மழையும் ,
திண் கூற்று வலிய யமனும்
அசனி இடியும் ஆகிய யாவையும்
இனம் நீரில் வாழும் வருத்தும் ஜந்துக்களாகும்.
அவற்றுள் செல் மந்தர் பிறப்பில் சென்று தவிக்கும் மனிதர்கள்
அங்கு விழுவோர் கடலில் விழுந்து வருந்துபவர்கள் ஆகும்
செல் மந்தரம் மேகம் தவழும்
கவின் தோளார் அழகிய தோள்களை உடைய
அரங்கர் ரங்கநாதருடைய
திரு பதமே திருவடிகளே
கரை சேர்க்கும் முக்தி ஆகிற கரையில் சேர்ப்பிக்கும்
வங்கம் கப்பல் ஆகும்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks