திருவரங்கத்தந்தாதி 47 அரங்கா ! அடியேன் தலைக்கு அருள்வது என்று ?
பதக்கமலங்கலணிமார்பபொன்னிபடிந்திமையோர்
பதக்கமலங்களறுசீரரங்கபகட்டயிரா
பதக்கமலங்கரித்தூர்வோன்சிவனயன்பார்க்கவந்துன்
பதக்கமலங்களடியேன்றலைக்கென்றுபாலிப்பதே
பதவுரை :பதக்கம் +அலங்கல்
பதக்க + மலங்கள்
பத + கமலங்கள்
பதக்கம் பதகத்தையும்
அலங்கல் ஆரங்களையும்
அணி மார்ப அணிந்த மார்பு உடையவனே !
இமையோர் தேவர்கள்
பொன்னி படிந்து காவிரியில் நீராடி
பதக்க மலங்கள் அறு தீய அசுத்தங்கள் நீக்குகின்ற
சீர் அரங்க ஸ்ரீ ரங்கநாதரே !
பகடு அயிராவதம் பெருமையுடைய ஐராவதத்தின்
கம் அலங்கரித்து மத்தகத்தை சிங்காரித்து
ஊர்வோன் வலம் வரும் இந்திரனும்
சிவன் அயன் சிவனும்.பிரமனும்
பார்க்க பார்க்கும்படியாக
வந்து எழுந்தருளி
உன் பத கமலங்கள் உன் திருவடித் தாமரைகளை
அடியேன் தலைக்கு அடியேனுடைய முடியில் வைத்து
பாலிப்பது என்று அருள் செய்வது எந்நாளோ ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks