திருவரங்கத்தந்தாதி 48 ஐயம் பருகியும் அரங்கத்தில் வாழ்வது ஐயமின்றி நன்று !
பாலனம்செய்யமர்நாடாண்டுபூணொடு பட்டணிந்து
பாலனம்செய்யகலத்துண்டுமாதர்பல்போகத்தையும்
பாலனம்செய்யவிருப்பதிளையம்பருகிநந்தன்
பாலனம்செய்யவள்கோமானரங்கம்பையில்கைநன்றே
பதவுரை : பாலனம் - பால் போன்ற அன்னப் பறவைகள்
பால் சோறு
பாதுகாத்தல்
பாலன் + அம்
செய் - வயல்
சிவந்த
செய்ய
லக்ஷ்மி
பால் அனம் பால் போல வெண்மையான அன்னப் பறவைகள்
செய் அமர் வயல்களில் இருக்கும்
நாடாண்டு தேசத்தை ஆண்டு
பூணொடு ஆபரணங்களையும்
பட்டணிந்து பட்டாடைகளையும் தரித்து
செய்ய கலத்து சிவந்த பொன்னாலான பத்திரத்தில்
பாலனம் உண்டு பால் சோற்றைப் புசித்து
மாதர் பல் போகத்தையும் பெண்களுடன் பல இன்பங்களையும்
பாலனம் செய்ய இருப்பதில் அனுபவித்து இருப்பதைக் காட்டிலும்
ஐயம் பருகி பிச்சை எடுத்த கூழை குடித்தாவது
நந்தன் பாலன் நந்த கோபாலன் குமரனும்
அம் செய்யவள் கோமான் அழகிய திருமகளின் கணவனுமான திருமாலினது
அரங்கம் ஸ்ரீரங்கத்தில்
பையில்கை வசிப்பது
நன்றே மிக்க நல்லது !
--
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks