திருவரங்கத்தந்தாதி 49 பாரில் உய்யப் பற்றுமின் அரங்கர் பாதத்தை !
பையிலத்திமூளைநரம்பூனுதிரம்பரந்தகுரம்-
பையிலத்தியுள்விளைபாண்டமென்னாமற்புன்பாவையர்தோற்-
பையிலத்திசெய்துநரகெய்துவீருய்யப்பற்றுமினோ
பையிலத்திமேவித்துயில்கூரரங்கர்பொற்பாதத்தையே
பதவுரை : அத்தி - அஸ்தி (எலும்பு) - அர்த்தி (ஆசை) - அப்தி (கடல்)
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பையில் ஒன்றொடொன்று பொருந்திய
அத்தி மூளை நரம்பு எலும்பும் , மூளையும் , நரம்பும் ,
ஊன் உதிரம் தசையும் , ரத்தமும்
பரந்த குரம்பை பரவிய சிறு குடிசை இது.
இலத்தி உள் விளை பாண்டம் மலம் உடலில் உண்டாகும் பாத்திரம் இது
என்னாமல் என்று அறியாமல்
புல் பாவையர் இழிகுணமுடைய பெண்களுடைய
தோல் பையில் உடம்பில்
அத்தி செய்து ஆசை வைத்து
நரகு எய்துவீர் நரகத்தை அடைபவர்களே !
உய்ய நீங்கள் நன்றாக வாழ
அத்தி கடலில்
பையில் ஆதிசேஷனுடைய படத்தின் கீழ்
மேவி விரும்பி
துயில் கூர் யோகநித்திரை செய்யும்
அரங்கர் ஸ்ரீ ரங்கநாதருடைய
பொன் பாதத்தை அழகிய திருவடிகளை
பற்றுமினோ சரண் அடையுங்கள் !
Bookmarks