திருவரங்கத்தந்தாதி 50 பாதகம் கைக்க அரங்கர் பாதம் கைக்கொள்வீர் !
பாதகங்கைக்குமரங்கர்பல்பேய்பண்டிராவணனுற்-
பாதகங்கைக்குமென்றெள்ளக்கொய்தார்படிக்கேற்றதிருப்-
பாதகங்கைக்குள்விழுமுன்னமேபங்கயன்விளக்கும்
பாதகங்கைக்குளிர்நீர்வீழ்ந்ததீசன்படர்சடைக்கே
பதவுரை :
பாதகம் பக்தர்களுடைய பாவங்களை
கைக்கும் வெறுத்து ஒழிக்கும்
அரங்கர் ஸ்ரீ ரங்கநாதரும் ,
பண்டு முன்னாளில்
இராவணன் ராவணனுடைய
உற்பாத கம் முளைத்த தலைகளை
பல்பேய்கள் பல பேய்கள்
கைக்கும் என்று எள்ள கசக்கும் என்று இகழுமாறு
கொய்தார் வெட்டினவருமான திருமால்
படிக்கு மகா பலியிடமிருந்து மூன்றடி நிலம் பெற
ஏற்ற வாங்குவதற்கு உடன்பட்ட
திருப்பாத கம் திருப்பி கொடுக்காத ஜலம்
கைக்குள்விழுமுன்னமே விஷ்ணுவின் கையில் விழுவதற்கு முன்பே
பங்கயன் பிரம்மா
பாதம் விளக்கும் விஷ்ணுவின் திருவடியை திருமஞ்சனம் செய்த
கங்கை குளிர் நீர் குளிர்ந்த கங்கா ஜலம்
ஈசன் படர்சடைக்கே சிவனுடைய விரித்த சடையில்
வீழ்ந்தது விழுந்து விட்டது .
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks