திருவரங்கத்தந்தாதி 52 அரங்கன் அடிக்கீழ் அண்டங்கள் தோன்றி அழியும் !
The insulting of Draupadi.
பரவையிலன்னகட்பாஞ்சாலிநின்பரமென்னநிரு
பரவையில்மேகலையீந்தானரங்கன்பணிந்திமையோர்
பரவையிலாழிப்பிரானடிக்கீழுற்பவித்தழியும்
பரவையில்மொக்குளைப்போற்பலகோடிபகிரண்டமே
பதவுரை : பரவு - ( பெரிய / துதித்த / கடல் )
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பரவு விசாலமான ,
ஐயில் அன்ன கண் வேலைப் போன்ற கூரிய கண்களை உடைய
பாஞ்சாலி திரௌபதி
நின் பரம் என்ன "என்னை காப்பது உன் கடமை" என்று வேண்ட
நிருபர் அவையில் அரசர்கள் சபையில்
மேகலை ஈந்தான் ஆடையை அளித்தவனும்
இமையோர் பணிந்து பரவு தேவர்கள் வணங்கித் துதித்தவனும்
ஐயில் ஆழி பிரான் கூரிய சக்கரத்தை உடையவனுமான
அரங்கன் ரங்கநாதனுடைய
அடிக்கீழ் திருவடிகளில்
பரவையில் மொக்குளைப்போல கடலில் தோன்றும் நீர்க்குமிழி போல
பல கோடி பகிரண்டம் அநேக கோடி அண்ட கோளங்கள்
உற்பவித்து அழியும் தோன்றி மறையும்
Bookmarks