திருவரங்கத்தந்தாதி 55 நந்தன்மதலாய் !நந்தனன் எந்தன் தீமை இகழேல் !

ஆரத்தநந்தருந்தாய்தந்தையாநந்தமாவரிகழ்
ஆரத்தநந்தனன்றீமைகண்டாலங்கவுத்துவபூண்
ஆரத்தநந்தசயனாவணியரங்காதிகிரி
ஆரத்தநந்தன்மதலாயென்றீங்குனக்கத்தன்மைத்தேபதவுரை :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅத்த தந்தையே !
அம கவுத்துவ அழகிய கௌஸ்துபத்தை தரிப்பவனே !
பூண் ஆரத்து ஹாரங்களை அணிந்து
அனந்த சயனா ஆதி சேஷன் மேல் படுத்திருப்பவனே !
அணி அரங்கா அழகிய ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே !
திகிரி ஆர் அத்த சக்கரத்தைக் கையில் உடையவனே !
நந்தன் மதலா நந்தகோபாலன் குமாரனே !
ஆர தனம் தரும் தாய் குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாயும்
தந்தை தந்தையும்
நந்தனன் தமது புதல்வன்
தீமை கண்டால் குறும்பாய் தீமை செய்தால்
ஆனந்தம் ஆவர் மகிழ்ச்சி அடைவரே அன்றி
இகழார் வெறுக்க மாட்டார்
என் தீங்கு எனது பிழைகளும்
உனக்கு அத்தன்மைத்தே உனக்கு அப்படிப் பட்டதே !