Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 56 அரங்கா ! அடியன் என்ற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 56 அரங்கா ! அடியன் என்ற

    திருவரங்கத்தந்தாதி 56 அரங்கா ! அடியன் என்று அடியேனை ஆண்டு அருள் !

    அத்தனுமன்புளவன்னையும்பேருமனந்தமதாம்
    அத்தனுமன்புலனாதலினாண்டருளம்புயைவீர்
    அத்தனுமன்புயமீதேறரங்கனஞ்சார்ங்கவயிர்
    அத்தனுமன்புகல்பேரிருவீர்க்குமடியனென்றே




    பதவுரை : தனு - ( உடல் / வில் )

    அத்தனும் தந்தையும் ,
    அன்பு உள அன்னையும் அன்பை உடைய தாயும் ,பேரும் பெயரும்
    அனந்தம் அது ஆம் அளவிட முடியாததான
    அத் தனு மன் அந்தந்த உடலில் வாழ்ந்து வந்த
    புல்லன் எளியவன் நான் .

    ஆதலினால் ஆகையால்
    அம்புயை இலக்குமி என்றும் ,
    வீரத்து அனுமன் பராக்கிரமம் கொண்ட ஹனுமானின்
    புயம் மீது ஏறு தோள்களின் மீது ஏறியவனும்
    அம சார்ங்கம் அழகிய சார்ங்கம் என்னும்
    வயிர
    த் தனு உறுதியான வில்லை உடையவனும்
    அரங்கன் ரங்கநாதன் என்றும்
    புகல் சொல்லப்படுகிறவருமான
    பேர் இருவீர்க்கும் உங்கள் இருவர்க்கும்
    அடியன் என்று தாசனாக என்னை ஏற்றுக்க்கொண்டு
    ஆண்டு அருள் பாதுகாத்து அருள்வீர்களாக !


    Last edited by sridharv1946; 05-07-13, 20:46.
Working...
X