தமிழ் வருடம், தமிழ் மாதம் வருகின்ற பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு குழந்தையின் தகப்பனார் வீட்டில் செய்ய வேண்டும்.
குழந்தையின் தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..
பத்ரிக்கை அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டிலேயே செய்வதுதான் சிறப்பு.
ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ணீர், கப்,(தண்ணீர் குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
உங்கள் குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.
குழந்தையின் பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம், மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வீபூதி, அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண் தரித்துக் கொள்ளவும்.
ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும். ,
தம்பதிகள் இருவரும் ஸ்வாமி பட்த்திற்கு அருகில் குத்து விளக்கு
கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி
குல தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு மஞ்சள் தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்று க்கொண்டு
பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம் செய்து பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.
என்று சொல்லி அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீழே வைத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.
புஷ்ப மாலாம் சமர்பயாமிபுஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
Bookmarks