திருவரங்கத்தந்தாதி 57 அகமே ! அரங்கருக்கு ஆட்செய் ! ஐவரை அடி !

அடியவராகவுமாட்கொள்ளவுமெண்ணியாருயிர்கட்கு
அடியவராகம்படைத்தமையாலகமேபெரிய
அடியவராகவரங்கருக்காட்செயருட்கதையால்
அடியவராகஞ்செய்மாரனுக்காட்செயுமைவரையே

பதவுரை : அடியவர் + ஆகவும்
அடி +அவர் + ஆகம்
அடிய + வராக
அடி +அவ + ராகம்

அடியவர் ஆகவும் தொண்டர்கள் ஆகுமாறும்
ஆட்கொள்ளவும் அடிமை கொள்ளுமாறும்
எண்ணி திருவுளம் கொண்டு
அவர் அப்பெருமான்
அடி ஆதி காலத்தில்
ஆருயிர்கட்கு நிறைந்த உயிர்கட்கு
ஆகம் படைத்தமையால் சரீரத்தைக் கொடுத்ததால்
அகமே மனமே !
பெரிய அடிய பெரிய கால்களுடைய
வராக வராஹனாக அவதரித்த
அரங்கர்க்கு ஆள் செய் ரங்கநாதர்க்கு அடிமை ஆகு !
அருள் கதையால் அவருடைய கருணையால்
அவ ராகம் கெட்ட ஆசையை
செய் மாரனுக்கு விளைக்கும் மன்மதனுக்கு
ஆள் செயும் ஐவரை அடிமை செய்யும் பஞ்ச இந்திரியங்களை
அடி அடக்கு !
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends