திருவரங்கத்தந்தாதி 58 அரங்கேசர் பிரிந்ததால் ஆழியும் வளையும் இழந்தாள் !
வரையாழிவண்ணரரங்கேசரீசன்முன்வாணன்றிண்டோள்
வரையாழியார்புள்ளின்வாகனத்தேவந்தநாடொடிற்றை
வரையாழியதுயராய்த்தூசுநாணுமதியுஞ்செங்கை
வரையாழியும்வளையுமிழந்தாளென்மடமகளே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை : ஆழி - ( கடல் / சக்கரம் / ஆழ்ந்த / மோதிரம் )
வரை ஆழி வண்ணர் கடல் போன்ற கரிய நிறத்தவரும் ,
ஈசன் முன் சிவனுடைய முன்னிலையில்
வாணன் திண் தோள் பாணாசுரனுடைய வலிய தோள்களை
வரை ஆழியார் வெட்டிய சக்கரத்தைக் கையில் உடையவருமான
அரங்கேசர் ரங்கநாதர்
புள்ளின் வாகனத்தே கருட வாகனத்தில்
வந்த நாள் தொடு காட்சி அளித்து பிரிந்த நாள் முதல்
இற்றை வரை இன்று வரை
என் மடமகள் மடமையுடைய எனது மகள்
ஆழிய துயர் ஆய் ஆழ்ந்த வருத்தத்துடன்
தூசும் நாணும் ஆடையையும் வெட்கத்தையும்
மதியும் அறிவையும்
செம் கை ( பிரிவினால் மெலிந்த ) சிவந்த கைகளில் அணிந்த
ஆழியும் வளையும் மோதிரத்தையும் வளையையும்
இழந்தாள் இழந்து விட்டாள்
Bookmarks