திருவரங்கத்தந்தாதி 60
வாராகவாமனனேயரங்காவட்டநேமிவல-
வாராகவாவுன்வடிவுகண்டான்மன்மதனுமட-
வாராகவாதரஞ்செய்வனென்றாலுய்யும்வண்ணமெங்கே
வாராகவாசமுலையேனைப்போலுள்ளமாதருக்கே.
பதவுரை :
வாராக (பூமியைக் காப்பாற்றிய) வராஹனே !
வாமனனே (எளிய) வாமனனே !
அரங்கா (இனிய இடத்தில் இருக்கும்) ரங்க நாதனே !
வட்ட நேமி வலவா வட்டமான சக்கரத்தை பிரயோகிப்பதில் வல்லவனே !
ராகவா (உயர் குடியில் பிறந்த) ரகு குல ராமா !
உன் வடிவு கண்டால் நின் அழகு பார்த்தால்
மன்மதனும் (அழகில் சிறந்த) மன்மதனும்
மடவார் ஆக பல பெண்களாய்ப் பிறந்து உன்னை அனுபவிக்க
ஆதாரம் செய்வன் என்றால் ஆசைப் படுவான் என்றால்
வார் ஆகம் கச்சு அணிந்த
வாச முலையேனைப் நறுமணமுள்ள தனங்கள் கொண்ட
போல் உள்ள மாதருக்கு என்னைப் போன்ற சாதாரணப் பெண்களுக்கு
உய்யும் வண்ணம் எங்கே வாழும் வழி எவ்வாறு ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks