மணியோசை-1


என்ன தேவி, உன்முகம் வாட்டமாக இருக் கின்றதே? என்று எம்பெருமான் ஸ்ரீமந்நாராய ணன் கேட்டதும், ஸ்ரீதேவி, ப்ரபோ, நம் குழந்தைகள் நம்மிடமே வந்துசேரவேண்டு மென்று நாம் எடுத்த முயற்ச்சிகளெல்லாம் வீணாகி விட்டனவே . என்று முடிக்குமுன்னரே, என்ன சொல்கிறாய் அதுதான் நம் அநந்தன் பூலோகத்தில் ராமாநுஜனாக அவதரித்து, சரணாகதி தத்துவத்தை மக்களுக்கு பேதம் பாராமல் எடுத்துச் சொல்லி அவர்களும் நம்மிடம் வரத்தொடங்கிவிட்டனரே என்று பெருமான் கூறியதும், தன் முகவாய் கட்டையைத் தம் தோள்மீது இடித்துக்கொண்டு, போதுமே, அவன் உபதேஸம் செய்துவிட்டுத்திரும்பிய சில ஆண்டுகளிலேயே மக்கள் மாறி விட்டார்களே என்று கிண்டலாக தேவி கூற, எம்பெருமான், என்ன மக்கள் மனம்மாறி விட்டார்களா, இல்லை மதம் மாறிவிட்டார்களா என வினவ, என்ன கிண்டலா, இல்லை தெரியாதமாதிரி நடிக்கின்றீர்களா என்று தேவி கேட்க, எல்லாம் உன்வாயால் கேட்டுத்தெரிந்து கொள்ள லாமே என்றுதான் என்று மஹாவிஷ்ணு கூறினார்.
நம் குழந்தை அநந்தன் எடுத்துக்கொண்ட முயற்சி, கஷ்டங்களுக்-கெல்லாம் பலன் இல்லாமல் போய்விடும் போல் தோன்றுகிறதே. அந்நியர்கள் படையெடுப்பாலும், மத்வரின் அவதாரத்தாலும் மக்கள் மனம் குழம்பி போயிருக்கிறார்கள். அவர்கள் மனம் மட்டும் மாறவில்லை, மதமும் மாற ஆரம்பித்துவிட்டார்களே. அதுதான் என்னுடைய கவலைக்குக்காரணம். என்று முடித்தாள் ஸ்ரீதேவி ஒரு பெருமூச்சுடன்.

அந்நியர்கள் படையெடுப்பால் மக்கள் பீதியடைந்து இருக்கிறார்கள் என்பது உண்மை, ஆனால் மத்வரின் அவதாரத்தால் என்ன நஷ்டம். அவர் எம்மைத்தானே ப்ரஹ்மம் என்று சொல்லியிருக்-கிறார். அவர் சீடர்களும் எம்மைத்தானே தொழு கிறார்கள். என்று முடிப்பதற்குள், தேவி இடை மறித்து, உண்மைதான். உங்களைத்தான் பரனாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதங் களில் காணப்படும் பேதஸ்ருதியைக் கொண்டு, ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டுதான் உண்டு என்கிறார். அசேதனங்களுக்குள்ளும் நீங்கள் வ்யாபித்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் ஜீவாத்மாக்கள் பக்தி யோகம் ஒன்றினால் மட்டுமே நம்மிடம் வந்து சேரமுடியும் என்கிறார். அசேதனங்களும் நம்மிடம் வந்து சேரக்கூடிய மார்கமான சரணாகதியை அவர்கூறவில்லையே. ஆகவே மனிதர்கள் மட்டுமே வந்தடைவார்கள். மேலும் உங்களுக்கேத் தெரியும் பக்தி மார்கம் எவ்வளவு கடினமானது, அதைக்கடைப்பிடித்தாலும் நம்மிடம் வந்துசேர பலஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் சரணா-கதியோ அப்படியில்லையே. ஒரு சிறு உபாயத்தால் இந்த ஜன்மாவின் முடிவிலேயே நம்மிடம் வந்து சேர்ந்துவிடலாமே. இதனால் இப்போது நம்குழந்தைகள் நம்மிடம் வந்து சேர்வது தாமதப்படுகிறதே. என்றாள்

இருக்கட்டுமே, மெதுவாகத்தான் நம்மிடம் வந்து சேரட்டுமே என்ற பகவான் சொன்னதுதான் தாமதம், ஸ்ரீதேவி கோபத்துடன் சீறினாள், உங்களுக்கென்ன, நீங்கள் ஆண், மேலும் எங்குவேண்டுமானாலும் பிறப்பீர் கள் , எப்படிவேண்டுமானாலும் வாழ்வீர்கள். நானும் ஒரு பைத்தியக்காரி-போன்று அகலக்கில்லேன் என்று உங்கள் திருமார்பில் அமர்ந்துகொண்டு,ஒவ்வொரு அவதாரத்திலும் உங்களுடனேயே வருவேன். உங்களுக்கு எங்கே நம் குழந்தைகளைப் பற்றியக்கவலை. என்று முடித்தாள்.

தேவி, உன் ஆதங்கம் எமக்குப்புரிகின்றது. இப்போது என்ன செய்யவேண்டும் அதைச்சொல் என்று நாரணன்கேட்க அதற்கு ஸ்ரீதேவி, என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, நம் குழந்தைகள் நம்மிடம் சீக்கிரம் வந்து சேரவேண்டும் என்றாள் கண்டிப்பாக.

நாமே அந்த எண்ணத்தில்தான் இருக்கின்றோம். திருமலை கோயில் கண்டையை ( மணியை ) பூலோகத்தில் அவதரிக்கச்செய்யலாம் என்று நினைக்கின்றேன் என்று எம்பெருமான் முடிப்பதற்குள், என்ன அசேதன மான ஒரு மணியையா? என்று தேவி கேட்க, அதற்கு என்ன தேவி உனக்குத்தெரியாததா ! சேதனம், அசேதனம் எல்லாவற்றிர்குள்ளும் நாம் தானே இருக்கின்றோம் என்று எம்பெருமான் கேட்க, அதற்கு தேவி, நன்றாகத்தெரியும். இருப்பினும் ஒரு மனிதர்களால் முடியாததை ஒரு மணி என்ன செய்துவிடப் போகின்றது பிராட்டிக்குத் தெரியாதா இருந்தும் கணவன் வாயைக்கிளறினாள், எல்லாப் பெண்களையும்போன்று !. சிரித்துக்கொண்டே, எம்பெருமானும் தேவி இந்த மணி எழுப்பப்போவது சாதாரண ஓசையில்லை. அந்த ஒலி ஒவ்வொரு ஜீவாத்மகளுக்குள்ளும் சென்று உறக்கத்திலிருக்கும் ( மதிமயங்கிக்கிடக்கும் ) அவர்களை எழுப்பி அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தையே உண்டாக்கப்போகின்றது. பொறுத்திருந்து பார் எம்பெருமான் முடிக்க,மனதிற்குள் சந்தோஷத் துடன், பார்க்கலாம், பார்க்கலாம் என்று ஸ்ரீதேவி கூறினாள்.

தூப்புல் , என்ற அக்ஹாரம், காஞ்சீபுரத்தில் திருதண்கா என்ற திவ்ய-தேஸத்தின் அருகாமையில் உள்ளது. தூப்புல் என்றால் பரிசுத்தமான புல் என்று பொருள். அதனை விச்வாமித்ரம் ( தர்பம் ) என்றும் கூறுவர். இந்த அக்ரஹாரத்தில் அவை விளைந்ததாலோ, இல்லை அங்கு விச்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததாலோ, அந்தப்பெயர் வந்திருக் கலாம். அங்கு அநந்தஸோமயாஜி என்பவர் யஜ்ஞங்களை அனுஷ்டித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடைய குமாரரான, புண்டரீகாக்ஷ தீக்ஷதரின் குமாரர், அநந்தஸூரி என்பவர். அவருக்கு,ஸ்ரீரங்காச்சாரியின், குமாரத்தியும், அப்பிள்ளாரின் ஸகோதரியுமான,தோதாரம்பாவை திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிகள் இனிதே வாழ்ந்து வந்தனர். அவர்க-ளுக்குச் சிலகாலம் குழந்தையில்லாமல் இருந்தது. அவர்கள் ஸ்வப்னத்தில்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதிருவேங்கடமுடையான், தோன்றி, நீங்கள் திருமலையில், எம் சந்நி-தானத்திற்கு வாருங்கள் உங்க ளுக்கு புத்ர பாக்யம் சித்திக்கும் என்று கூற இருவர்கனவிலும் ஒருசேர வேங்கடவன் வந்த கார ணத்தால் இருவரும் சந்தோஷப் பட்டனர். எம்பெருமான் கருணைத் தங்கள் பக்கம் இருக்கின்றது என மகிழ்ந்து உடனே திருமலைக்கு யாத்திரை கிளம்பினர்.
வேங்கடத்திற்கு நிகரான க்ஷேத்ரமும் கிடையாது, வேங்கடவனுக்கு நிகரான தெய்வமும் கிடையாது. அவன் இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். ஸ்ரீவைகுண்த்தை விட்டு,ஸ்வாமி புஷ்கரணி தீரத்தில் பிராட்டியுடன் நித்யவாசம் புரிகின்றான். கலியுகத்தில் பாவம் செய்தவர்களுக்கு இவனையன்றி வேறு புகலிடம் கிடையாது என்பதை நாம் எல்லோரும் அறிந்ததே. அத்தகய ப்ஸித்தி வாய்ந்த திருமலைக்கு,
அந்த தம்பதிகள் வந்து
சேர்ந்தனர். அங்கு ஸ்வாமி புஷ்கரணியில் தீர்தாமாடி, நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, ஸ்ரீநிவாஸனை பாதாதி கேசம் சேவித்தனர். பிறகு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து உணவருந்தி, அன்று இரவு அங்கேத் தங்கினர். என்னே ஆச்சர்யம், ஒரு ஒரு பாலகன் திருவேங்கட-முடையான் ஸந்நிதியிலிருந்து வெளிப்பட்டு வந்து, ஸ்ரீராமாநுஜ-ஸித்தாந்தத்தைப் பரப்ப இருக்கும் ஒரு புத்ர ரத்னத்தை உங்களுக்குத் தந்தோம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, கோயில் திரு மணியை அநந்த ஸூரியிடம் தர, அவர் தைத் தம் மனைவியிடம் தர, அந்த அம்மையார் அதனை வாங்கி வாயில் போட்டு விழுங்கினார். ஸ்வப்னம் கலைந்த வராய் அநந்தஸூரி பதைபதைத்து எழுந்திருந்து பார்க்க, அவர் மனை வியாரும் பதைபதைப்புடன் எழுந்திரு ந்தார் காரணம் ! அதே போன்ற கனவை அவரும் கண்டதாலேயே. இருவரும் தாங்கள் கண்டக் கனவைப் பரிமாறிக்கொண்டனர். அருகில் இருந்து அவற்றைக் கேட்டவர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
மறுநாள் காலை, கோயில் ஸந்நிதி திறக்கப்பட்டதும், உள்ளே கண்டை ( மணி )யில்லாததை அர்ச்சகர் கண்டு அலறினார். இதனை அறிந்த கோயில் அதிகாரிகள் மணி காணாமல் போனதற்கு அர்ச்சகர்களின் அஜாக் ரதையே காரணம் என்று அவர்களைத் தண்டிக்கத்தீர்மானித்தனர். ஆனால் அப்போது அருகே இருந்த திருமலைஜீயர் ஸ்வாமிகள், திரு வேங்கட முடையான், ஒருபாலகனாக தம் திருமணியை ஒரு தம்பதிகளுக் குத்தர,அந்த மணியை அப்பெண்மணி வாங்கி விழுங்குவது போல கனவு கண் டோம் என்று கூறினார். அங்கு இருந்த வேறு சிலரும் தாங்களும் அது போன்றே கனவு கண்டதாக்க் கூறவே அர்ச்சகர் தண்டனையிலிருந்து தப்பினார். கோயில் அதிகாரிகள் அநந்தஸூரியையும், தோதாரம்பா வையும் அழைத்துக் கேட்ட போது, அவர்களும் அதுபோன்ற கனவு தங்களுக்கு வந்ததாகக்கூறினர். அதைக்கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். அந்த நாளிலிருந்து தோதாரம்பையார் கர்பவதியானார்.
சாதாரணமாகப் பெண்கள் பத்து மாதம்தான் கர்பம் தரிப்பர். ஆனால், தோதாரம்மையோ கர்பம் தரித்த பன்னிரண்டாவது மாதம்தான் அதாவது விபவ வருஷம் ( 1269 A.D ) புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் திரு வேங்கடமுடையானின் தீர்த்தவாரி தினத்தன்று,அதி தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். திருமலையப்பனின் மணியின் அவதாரமாகப் பிறந்த இந்த குழந்தைக்கு, வேங்கடநாதன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். யதாகாலத்தில் முறையே வேங்கடநாதனுக்கு அன்ன ப்ராசனம் சிறப்பாக நடத்தப்பட்டது.
Source:
http://poigaiadia.blogspot.in/