பதவுரை : அறுகு + தலை அலறு + குதலை அளறு + உகுதலை அறு + கு + தலை
கு பூமியை தலைக்கொள் முடியின் மேல் சுமக்கின்ற பணி ஆதி சேஷனிடம் பள்ளி கொண்ட அரங்கா ரங்கா நாதா ! அறுகு தலைப்பெய் அறுகம் புல்லின் நுனியில் விழும் பனி போன்ற பனி போல சிறிய தாது இந்திரியம் உரு ஆய மனித வடிவமாய் மாறி , பிறந்து பிறந்து , அலறு அழுது , குதலை பிள்ளை ஆய் மழலை பேசும் குழந்தை ஆகி , காளை ஆகி இளைஞன் ஆகி , கிழம் ஆகி ( மூப்பு வந்து )வயோதிகன் ஆகி , ஐ அளறு உகுதலை செய்து (நோய் வந்து )கோழையைவெளியே துப்பி , வீழ காயம் (மரணம் வந்து )இறக்கும் உடம்பை நான் என்னும் தான் என்று நினைக்கும் , ஆர் இருளை கொடிய மன இருளை அறு நீக்கு ; நின்கண் ஆசை தந்து உன்னிடம் பக்தி உண்டாக்கு !
Bookmarks