திருவரங்கத்தந்தாதி 67 அரங்கனைக் கற்ற பின்னே ஈனரைப் பாடேன் !
கனகவிமானமற்றீனர்க்குரைக்கிலென்கால்பெற்றவா-
கனகவிமானற்கருடப்புள்ளூர்தியைக்கான்மலர்கோ-
கனகவிமானம்புவிமான்றடவரக்கண்வளருங்-
கனகவிமானத்தரங்கனைநாச்சொல்லக்கற்றபின்னே
பதவுரை :
கால் பெற்ற வாயு மைந்தனான
வாகன கவி ஹனுமான் மீதும்
மால் நல் கருடன் புள் பெருமையும் அழகும் உடைய கருடன் மீதும்
ஊர்தியை ஏறிச் செல்பவனும் ,
கோகனக வி மான் தாமரையில் இருக்கும் மகா லக்ஷ்மியும்
அம புவி மான் அழகிய பூமி தேவியும்
கால் தட வர திருவடித் தாமரைகளை வருட
கண் வளரும் யோகநித்திரை செய்பவனும்
கனக விமானத்து பொன் விமானத்தை உடையவனுமான
அரங்கனை ரங்க நாதனை
நா சொல்ல கற்ற பின்னே நாவினால் பாடப் பயின்ற பின்
கனம் கவி பெருமையான பாடல்களை
மானம் அற்று வெட்கம் இல்லாமல்
ஈனருக்கு உரைக்கிலேன் அற்பர்களிடம் பாட மாட்டேன்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks