தேவையானவை :

தோசை மாவு 1 கப்
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
கொத்துமல்லி கொஞ்சம்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.

குறிப்பு: ஓரம் கரகரப்பாக வரணும் என்று விரும்புபவர்கள், மாவுடன் கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கவும். 1 கப் தோச மாவு என்றால் 2 - 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம். பொதுவாக தோசை மாவு கொஞ்சம் புளித்ததும் இப்படி ஊத்தப்பம் செய்வது வழக்கம். வேண்டுமானால் ப்ரெஷ் மாவிலும் கூட இப்படி ஊத்தப்பம் செய்யலாம்.
இதையே இலுப்ப சட்டி இலும் மேலே மூடி வைத்து வார்க்கலாம்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends