ஆச்சர்ய தேவோ பவ என்கிறது நம் தர்மஸாஸ்த்ரம்.
திருவரங்கப்பெருமாள் அரையர் என்பவர் ராமாநுஜருக்கு, அருளிச்செய்த நல்வார்-த்தைகள் : ஆச்சார்ய : ஸ ஹரி : ஸாக்ஷாத் சரரூபி நஸம்ய : என்றும் பீத-வாடைப்பிரானார் பிரம குருவாக வந்து என்றும் சொல்கிறப் படியே, உறங்கும் பெருமாளே உலவும் பெருமாளாக வந்தவர்கள் ஆச்சார்யர்கள். அவர்கள் பக்கலில் மந்தரங்களையும், மந்த்ரார்தங்களையும் சிக்ஷிக்கப்பெற்று எம்பெருமான் கீதையின் முடிவில் சரமஸ்லோகத்தில் அருளிச்செய்த உபாயமான சரணாகதியை அனு-ஷ்டிக்க வேண்டும். இஹத்திலும், பரத்திலும் க்ஷேமத்தையளிக்க வல்லது ஆச்சார்-யன் அநுக்ரஹம் ஒன்றே. இதற்கு உதாரணமாக விளங்கியவர் மதுரகவியாழ்வார் என்று எடுத்துக்கூறினார் ஆனால் நம்மில் பலருக்கு நம் பூர்வீகம், குடிப்பெயர், ஆச்சார்யன் யார் ? என்பது போன்ற எதுவும் தெரிவதில்லை. அப்படி இருக்க நம் சந்தத்களுக்கு எப்படி தெரியப் போகிறது. இது மிகமிகத்தவறு. ஆகவே உடனே நம்வீட்டுப் பெரிய-வர்களிடம் கேட்டு அறிந்து, நம்ஆச்சார்யனை அணுகி உபதேஸம் பெறவேண்டும்.
ஆகவே சிந்தியுங்கள், செயல்படுங்கள்.
courtesy poigaiadian


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends