இன்று நாம் நம் குழந்தைகளுக்கு, புதுமையான பெயர்களை வைக்க வேண்டுமென்பதற்காக, சில புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி அதில் தேடித்தேடி, வாயில் நுழையாத, மனத்தில் நிற்காதப் பெயர்-களைச் சூட்டி மகிழ்கிறோம். அந்த நாட்களில் நம் பெரியோர்கள் பெருமாளின் பெயரை பிள்ளைகளுக்கும், தாயார் பெயரை பெண்குழ-ந்தைகளுக்கும் வைப்பர். காரணம் அந்தக் குழந்தைகளை அழை-க்கும் போதாவது எம்பெருமான் நாமத்தை உச்சரிப்போம் இல்லையா ஆழ்வார்களும் கடைசீ காலத்தில் பெருமாளை நினைக்க முடி-யாமல் போய்விடப்போகிறதேயென்று, அப்போதைக்கு இப்போதே உன் நாமாவை உச்சரிக்கும் பாக்யத்தை எனக்குக் கொடு என்று வேண்டுகின்றனர். அஜாமிளன் என்பவன் மரணப்படுக்கையில் இருக்கும்போது தன்னையறியாமல் தன் மகன் நாராயணனை அழைக்க வைகுந்தம் சேர்ந்தானன்றோ ?
கடவுள் பெயரை வைப்பதனால் நம்மை அறியாமலே பலமுறை அவன் நாமாவை உச்சரிப்போம் இல்லையா ?
ஆகவே நீங்களும் சிந்தியுங்கள்

courtesy:Poigaiadian