வாரசூலை என்பதின் பொருள் என்ன ?
பொதுவாக நாம் ஏதேனும் ஒருகாரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் வாரசூலை உள்ளதா? என்பதை பார்த்து தான் கார்யமுயற்ச்சி செய்வோம் , இது நமது ஜோதிட கலாச்சாரம், நான் புதியதாய் ஜோதிடம் பயில ஆரம்பித்த போது வாரசூலை என்பதின் பொருள் குறித்து நானும் பல அனுபவ ஜோதிடர்களை அணுகி கேட்ட போது பலரிடம் இதுபற்றி “ எதுவும் தங்களுக்கு தெரியாது” என்றும் “ பஞ்சாங்கத்திலேயே வாரசூலை எந்தநாளுக்கு எத்திசை சூலம் என்பது போட்டிருக்குமே? அதை பார்த்து பலன் சொல்லுங்க” என்றனர்,
ஆனால் எனக்கு வாரசூலம் எப்படி உருவானது என்பதை அறிய ஆவல் எற்ப்பட்ட்து!
பின்னர் பலநூல்கள் தேடி நான் அறிந்து கொண்ட விஷயம் என்னவென்றால்
“இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்” அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது “எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது! சிவனின் சூலம்
ஞாயிறு = மேற்கு
திங்கள் = கிழக்கு
செவ்வாய்= வடக்கு
புதன்= வடக்கு
வியாழன்= தெற்கு
வெள்ளி= மேற்கு
சனி= கிழக்கு
பின் திரும்ப மேலிருந்து கணக்கிடவும்’ ’சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம்’ என்பதே பொருள்
Astro Senthil Kumar
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks