திருவரங்கத்தந்தாதி 71 ஆதியில் குடை போல் இருந்த ஆதித்யன் பின்பு அடியில் ஆழி மணி போல் ஆனான் !
மலருந்திமேல்விழமெய்நெரித்தான்வையமேழுந்துஞ்சா-
மலருந்தினானரங்கன்குறளாய்மண்ணளந்தவந்நாண்
மலருந்திவாக்கதிர்வண்குடையாய்முடிமாமணியாய்
மலருந்தியாய்த்திருத்தாள்விரலாழிமணியொத்ததே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை : மலர் + உந்தி
துஞ்சாமல் + அருந்தி
மலரும் + திவா + கதிர்
மலர் + உந்தி + ஆய்
மலர் மல்லர்கள்
உந்தி மேல் விழ தன் மேல் வந்து விழுந்தவுடன்
நெரித்தான் அவர்களை அழித்தவனும்
வையம் ஏழும் துஞ்சாமல் ஏழு உலகங்களும் அழியாதபடி
அருந்தினான் அவைகளை வயிற்றில் அடக்கியவனுமான
அரங்கன் ரங்கநாதன்
குறள் ஆய் வாமனனாய்ச் சென்று
மண் அளந்த அந்நாள் உலகை அளந்த அந்த நாளில்
மலரும் திவாக் கதிர் பரவும் சூரிய மண்டலம்
வண் குடையாய் முதலில் உயரே குடை போல் இருந்தது
முடி மணி ஆய் (பின்பு வாமனன் வளர வளர) கிரீடத்தில் மணி போல் மாறி ,
மலர் உந்தி ஆய் பின்பு நாபித் தாமரை போல் மாறி ,
திருத்தாள் விரல் ஆழி மணி ஒத்தது (கடைசியில்) கால் விரலில் அணியும் மோதிரக் கல் போல் ஆனது
Bookmarks