திருவரங்கத்தந்தாதி 72 அரங்கன் அடியார் அடியை வணங்கினார் இந்திரன் போல் இனிதே வாழ்வார் !
மணிவாசற்றூங்கவொருகுடைக்கீழ்வையங்காத்துச்சிந்தா-
மணிவாசவனெனவாழ்ந்திருப்போர்பின்னைமாதிருக்கு
மணிவாசமார்பரங்காகேசவாவென்றுவாழ்த்தித்திரு
மணிவாசகங்கொண்டணிவாரடியைவணங்கினரே
பதவுரை : மணி + வாசல்
சிந்தாமணி + வாசவன்
மணி + வாச + மார்பு
திருமண் + இவ்வாசகம்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பின்னை மாது இருக்கும் திருமகள் குடியிருக்கும்
மணி வாச மார்பு அழகிய மணமுள்ள மார்பை உடைய
அரங்கா ரங்கநாதனே !
கேசவா கேசவனே !
என்று வாழ்த்தி என்று துதித்து
இவ்வாசகம் கொண்டு இந்த பன்னிரண்டு நாமங்களை உச்சரித்து
திருமண் அணிவார் திருமண் தரித்துக் கொள்ளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
அடியை வணங்கினரே திருவடிகளை நமஸ்கரித்தவர்களே
மணி ஆராய்ச்சிமணி
வாசல் தூங்க அரண்மனை வாயிலில் தொங்க
ஒரு குடைக்கீழ் ஒரு வெண்கொற்றக்குடையின் கீழ்
வையங்காத்து உலகத்தை அரசாண்டு
சிந்தாமணி வாசவன் என சிந்தாமணியை உடைய இந்திரன் போல
வாழ்ந்திருப்போர் இனிமையாக வாழ்வார்கள் !
Bookmarks