திருவரங்கத்தந்தாதி 73 அரங்கர் அன்றி காப்பார் இல்லாததை அகிலமே அறியும் !

வணங்கரியானரங்கன்னடியார்தொழவாளரவு
வணங்கரியாடற்பரிதேர்நடத்தெந்தைவானவர்க்கும்
வணங்கரியானன்றிக்காப்பாரில்லாமைவிண்மண்ணறியும்
வணங்கரியானவர்வாணன்கண்டாகனன்மார்க்கண்டனே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை : வணம் + கரியான்
உவணம் + கரி + ஆடல்
வணங்கு + அரியான்
வணம் + கரி + ஆனவர்வணம் கரியான் கரிய நிறம் கொண்டவனும்
அடியார் தொழ பக்தர்கள் வணங்க
வாள் அரவு ஒளியுடைய ஆதி சேஷன் ,
உவணம் கருடன் ,
கரி யானை ,
ஆடல் பரி ஆடும் குதிரை
தேர் நடத்து தேர் ஆகிய வாஹனங்களில் வீதி வலம் வரும்
எந்தை எமது தலைவனும்
வானவர்க்கும் வணங்கு அரியான் தேவர்களுக்கும் வணங்க முடியாதவனுமான
அரங்கன் அன்றி ரங்கநாதன் அல்லாமல்
காப்பார் இல்லாமை பதுகாப்பவர் இல்லாததை
விண் மண் அறியும் வணம் வானும் பூமியும் அறியும்படி
கரி ஆனவர் சாக்ஷி ஆனவர்கள் :
வாணன் பாணாசுரன் ,
கண்டாகனன் கண்டாகர்ணன் ,
மார்க்கண்டனே மார்கண்டேயன் ஆகியோர் ஆவர் .