திருவரங்கத்தந்தாதி 74 அரங்கனின் அன்பனான நான் ஆரணங்குகளின் அழகு
கண்டு மருளேன் !
கண்டலங்காரளகங்கெண்டைமேகங்கவிரிதழ்சொல்
கண்டலங்காரமுலையிளநீரென்றுகன்னியர்சீர்
கண்டலங்காரமருளேன்புனற்கயல்கொக்கென்றஞ்சக்-
கண்டலங்காரமலரரங்கேசர்க்குக்காதலனே
க
பதவுரை : கண் + தலம் + கார் + அளகம்
கண்டு + அலங்கு + ஆரம்
கண்டு + அலங்காரம்
கண்டல் + அங்கு + ஆர
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
புனல் கயல் நீரிலுள்ள மீன்கள்
கொக்கு என்று அஞ்ச கொக்கோ என பயப்படும்படி
கண்டல் தாழைகள்
அங்கு அந்த நீரில்
ஆர மலர் அதிகமாக மலர்ந்துள்ள
அரங்க ஈசர்க்கு திருவரங்கத்துக்கு தலைவன் ஆன ரங்கநாதனுடைய
காதலன் பக்தன் ஆன நான்
கன்னியர் பெண்களுடைய
கண்தலம் கண்களை
கெண்டை கெண்டை மீன் என்றும் ,
கார் அளகம் கரிய கூந்தலை
மேகம் கரிய மேகம் என்றும் ,
இதழ் அதரத்தை
கவிர் முருக்க மலர் என்றும்
சொல் பேச்சை
கண்டு கற்கண்டு என்றும்
அலங்கு ஆரம் முலை அசையும் மாலைகளை உடைய தனங்களை
இளநீர் என்று இளநீர் என்றும்
சீர் கண்டு சிறப்பை நினைத்து
அலங்காரம் மருளேன் அவர்களது அழகைக் கண்டு மயங்க மாட்டேன் !
Bookmarks