Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 75 பூ தேவியை நீயே காத்Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 75 பூ தேவியை நீயே காத்Ī

    திருவரங்கத்தந்தாதி 75 பூ தேவியை நீயே காத்தாய் ! வைதேகியை வானரங்கள் மூலம் காத்தாய் ! அரங்கா ! இது என்ன மாயை !

    காதலைவாரிமண்வெண்கோட்டில்வைத்துண்டுகாட்டியரங்-
    காதலைவாகழற்குள்ளாக்கினாய்கரப்பெங்கெனவே
    காதலைவார்குழைவைதேகியைநின்கருத்துருக்குங்-
    காதலைவானரர்த்தேடவிட்டாயிதுகைதவமே

    பதவுரை :காது + அலை + வாரி
    அரங்கா + தலைவா
    காது + அலை + வார்
    காதலை + வானரர்


    அரங்கா ரங்கநாதனே !
    தலைவா தலைவனே !
    காது அலை வாரி மண் மோதும் அலைகளுடைய கடல் சூழ்ந்த பூமியை
    வெண்கோட்டில் வைத்து (வராஹனாய் ) வெண்மையான கொம்பில் வைத்து
    உண்டு (பிரளய காலத்தில்) வயிற்றில் அடக்கி
    காட்டி (பிரளயத்தின் பின்) வெளியே உமிழ்ந்து
    கழற்கு உள் ஆக்கினாய் (திரிவிக்ரமரனாய் ) ஒரு அடிக்குள் வைத்தாய்
    நின் கருத்து உருக்கும் (ராமனாய்) உன் மனத்தை உருகவைக்கும்
    காதலை மனைவியான
    காது அலை காதுகளில் அசையும்
    வார் குழை பெரிய காதணியை உடைய
    வைதேகியை சீதையை
    கரப்பு எங்கு என எங்கு ஒளிக்கப்பட்டிருக்கிறாள் என்று
    வானரர் தேட விட்டாய் (ராமனாய்) குரங்குகளை பார்க்கச் சொன்னாய் !
    இது கைதவமே இது உன் மாயையே !


Working...
X