Announcement

Collapse
No announcement yet.

காகுத்தா ! திருவரங்கத்தந்தாதி 76 கடல் தெய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காகுத்தா ! திருவரங்கத்தந்தாதி 76 கடல் தெய்

    திருவரங்கத்தந்தாதி 76 காகுத்தா ! கடல் தெய்வம் தொழக்கண்ட நீ அவனை ஏன் தொழுதாய் ?

    தவராகவக்கணையொன்றாற்கடற்தெய்வந்தானென்றிருந்-
    தவராகத்தீர்த்துத்தொழக்கண்டநீதர்ப்பைமேற்கிடந்து
    தவராகப்பாவித்தென்னோதொழுதாய்தண்ணரங்கத்துமா-
    தவராகவாகண்ணனேயெண்ணாணாவவதாரத்தனே


    பதவுரை : தவர் +ஆக
    இருந்த + அ + ராக

    தவர் + ஆக
    மாதவ + ராக

    தண் அரங்கத்து குளிர்ச்சியான ஸ்ரீரங்கத்தில் உள்ள
    மாதவ லக்ஷ்மீ பதியே !
    ராகவா ராமனே !
    கண்ணனே கிருஷ்ணனே !
    எண் ஒணா அவதாரத்தனே எண்ண முடியாத அவதாரங்களை எடுத்தவனே !
    தவர் வில்லிலிருந்து
    ஆகவக் கணை ஒன்றால் போர்க்கு உரிய அம்பினால்
    கடல் தெய்வம் வருணன்
    தான் என்று கர்வத்துடன் இருந்த
    அ ராகம் தீர்த்து அவனது கெட்ட எண்ணத்தை ஒழித்து
    தொழக்கண்ட உன்னை வணங்கும்படி செய்த நீ
    தரப்பை மேல் கிடந்து தர்ப்பசயனத்தில் படுத்து
    தவர் ஆக பாவித்து தபஸ்வீ போல
    என்னோ தொழுதாய் அவனை ஏன் வணங்கினாய் ?


    Last edited by sridharv1946; 12-07-13, 21:07.
Working...
X