திருவரங்கத்தந்தாதி 77 மண்ணளந்த போது விண்ணவர் தூவிய தண் மலர் விண்மீனை ஒத்தன !
தாராகணமண்ணளந்தவந்நாளன்பர்சாத்துந்துழாய்த்-
தாராகணம்புயம்போலரங்காதலமேழுக்குமா-
தாராகணமங்கையாயும்பர்தூவியதண்மலர்வீழ்
தாராகணமுனில்லாகாற்றிற்சூழ்வளந்தானொக்குமே
பதவுரை :தாரா + கணம்
தாரா + கண் + அம்புயம்
ஆதாரா + கணமங்கையாய்
தாரா + கணமும்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
அன்பர் சாத்தும் பக்தர்கள் சமர்ப்பித்த
துழாய்த்தாரா துளசி மாலை அணிந்தவனே !
கண் அம்புயம் போல் தாமரை போன்ற கண்ணுடைய
அரங்கா ரங்கநாதா !
தலம் ஏழுக்கும் ஆதாரா ஏழு உலகங்களுக்கும் ஆதாரமானவனே !
கண மங்கையாய் திருக்கண்ண மங்கையில் இருப்பவனே !
மண் அளந்த அன்னாள் உலகம் அளந்த அக்காலத்தில் ,
தாராகணம் நக்ஷத்திர மண்டலம்
உம்பர் தூவிய தேவர்கள் உன் மேல் சொரிந்த
தண் மலர் குளிர்ந்த மலர்கள்
வீழ் தாரா பூமியில் விழாமலும்
கணமும் நில்லா ஒரு கணமும் நில்லாமலும்
காற்றில் சூழ் வாயுமண்டத்தில் சுழல்வதைப்
வளம் ஒக்கும் போன்று இருந்தது
Bookmarks