Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 79 அரங்கன் சங்கின் அரவ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 79 அரங்கன் சங்கின் அரவ

    திருவரங்கத்தந்தாதி 79 அரங்கன் சங்கின் அரவம் கேட்டு அமரர் சாய்ந்தனர் !

    தாமரைமாத்திரைமூப்பற்றவானவர்தண்ணறுஞ்செந்-
    தாமரைமாத்திரைவந்தாடலைவரைத்தண்ணரங்க-
    தாமரைமாத்திரைபோல்வளைந்தேற்றுத்தருப்பொருட்டால்
    தாமரைமாத்திரைக்கேசங்கினோசையிற்சாய்ந்தனரே



    பதவுரை : தாமரை + மாத்திரை (அளவு)
    தாமரை + மா + திரை(கடல்)
    தாமரை + மா + திரை (சீலை)
    தாம் + அரை + மாத்திரை{நேரம்)

    தாமரைமாத்திரை கோடிகோடி அளவுள்ள
    மூப்பற்ற வானவர் முதுமை இல்லாத தேவர்கள்
    தருப் பொருட்டால் பாரிஜாத மரத்தின் காரணமாக
    தண் திரை குளிர்ந்த பாற்கடலிலிருந்து
    நறும் செந்தாமரை வந்தாள் மணமுள்ள சிவந்த தாமரை மலரில் வந்த
    மா தலைவரை மகா லக்ஷ்மியின் கணவரும்
    தண் அரங்க தாமரை குளிர்ந்த ஸ்ரீரங்கத்தை உடையவருமான அரங்கனை
    மா திரை போல் பெரிய திரைச்சீலை போல
    வளைந்து ஏற்று சூழ்ந்து எதிர்த்து வந்த
    தாம் அந்த தேவர்கள்
    சங்கின் ஓசையின் அரங்கனது சங்கத்தின் ஓசையால்
    அரை மாத்திரைக்கே அரை க்ஷணத்தில்
    சாய்ந்தனர் மயங்கி வீழ்ந்தனர்

Working...
X