திருவரங்கத்தந்தாதி 80 குந்தம் ஏறி, குந்தம் ஏந்திய முகுந்தன் துன்பம் தவிர்ப்பான் !
சாகைக்குந்தத்துத்துகிறூக்கி மாதர்தமைநகைத்தாய்
சாகைக்குந்தத்துவங்கட்குமெட்டாய்தண்புனலரங்கே-
சாகைக்குந்தத்துப்படையாழியேந்தறமர்கள்வெய்யோர்
சாகைக்குந்தத்து த்தவிர்கைக்கும்போலுமுன்சங்கற்பமேபதவுரை : சாகை + குந்தத்து
சாகைக்கும் + தத்துவங்கட்கும்
அரங்கேசா +கை + குந்தத்து
சாகைக்கும் + தத்து

சாகைக் குந்தத்து குருந்த மரத்தின் கிளைகளில்
துகில் தூக்கி சேலைகளை எடுத்துச் சென்று
மாதர் தமை நகைத்தாய் அந்த கோபியர்களை கேலி செய்தாய் !
சாகைக்கும் வேதங்களுக்கும்
தத்துவங்கட்கும் எட்டாய் தத்துவங்களுக்கும் எட்டாதவனே !
தண் புனல் அரங்கேசா குளிர்ந்த காவிரி நீர் சூழ்ந்த ஸ்ரீரங்த்துக்கு தலைவனே !
குந்தத்து குந்தம் எனும் ஆயுதத்தையும்
படை ஆழி சக்கரப் படையையும்
கை ஏந்தல் கைகளில் தரித்திருப்பது
தமர்கள் தத்து தவிர்கைக்கும் பக்தர்களுடைய துன்பத்தை நீக்குவதற்கும்
வெய்யோர் சாகைக்கும் தீயவர்களை அழிப்பதற்கும்
உன் சங்கற்பம் போலும் நீ கொண்ட கருத்து போலும் !


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends