Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 82 அரங்கா ! காணும் நாள் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 82 அரங்கா ! காணும் நாள் 

    திருவரங்கத்தந்தாதி 82 அரங்கா ! காணும் நாள் இனி என்று அருளே !

    இருந்தேனுகமுடவன்வரைநோக்கியிருப்பதுபோல்
    இருந்தேனுகந்துனைவைகுந்தனொக்கியெதிர்பொருங்கேள்-
    இருந்தேனுகனு ம்படவதைத்தாய்வெண்ணெயாமத்தொளித்து
    இருந்தேனுகரரங்காகாணுனாளினியென்றருளே



    பதவுரை : இரும் + தேன் + உ
    இருந்தேன் + உகந்து
    கேளிரும் + தேனுகனும்
    இருந்தே + நுகர்

    எதிர் பொரும் எதிரில் வந்து போரிட்ட
    தேனுகனும் கேளிரும் தேனுகாசுரனும் அவனது நண்பர்களும்
    பட வதைத்தாய் அழியும்படி கொன்றாய்
    யாமத்து ஒளிந்திருந்தே இரவில் மறைந்திருந்து
    வெண்ணெய் நுகர் வெண்ணெயை உண்ட
    அரங்கா ரங்கநாதனே !
    இரும் தேன் உக இனிய தேன் வாயில் விழ வேண்டும் என்று
    முடவன் ஒரு முடவன்
    வரை நோக்கி இருப்பது போல் மலையை பார்த்து இருப்பது போல்
    உனை உகந்து உன்னை அடைய விரும்பி
    வைகுந்தம் நோக்கி இருந்தேன் வைகுண்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
    காணும் நாள் உனை வைகுண்டத்தில் பார்க்கும் நாள்
    இனி என்று இனி எப்போதோ ?
    அருள் அருள்வாயாக !
Working...
X