Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 3 of 3

Thread: பஞ்ச கோசமும் பரமாத்மனும் ஓர் அறிமுகம்

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
 1. #1
  Moderator PerformerBetter
  Join Date
  May 2013
  Posts
  5
  Downloads
  1
  Uploads
  0
  Rep Power
  103
  Font Size

  Default பஞ்ச கோசமும் பரமாத்மனும் ஓர் அறிமுகம்

  இதோ நாம் ஒரு பயணம் துவங்குவோம்.

  பலபுறத்தும் பயணம் செய்திருக்கிறோம் நாம். உட்புறம் நோக்கிய பயணம் இது. நான்கு திசைகளும் நாமறிவோம், நான் எனும் திசை இது.

  யோகம் எனும் வண்டியிலே, அத்யாத்மிகப் பாதையிலே, குருவருள் எனும் பயணச் சீட்டுப் பெற்று, ஆத்மாவெனும் இலக்கு நோக்கிச் செல்லும் நெடிய பயணம் இது.

  இப்பயணத்தின் இடையில் வரும் ஐந்து சந்திப்புக்களே பஞ்ச கோசங்கள்.

  மஹாபாரதத்தின் துவக்கத்திலேயே கூறப்படும் மிக உயர்ந்த வம்சம், பிருகு வம்சம். அவ்வம்சத்தின் நாயகனான பிருகு மஹரிஷியைக் கொண்டு, உபநிஷதம் நமக்குப் பஞ்சகோசங்களை அறிமுகம் செய்கிறது.

  Dear you, Thanks for Visiting Brahmins Net!
  JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends  வருணனின் புத்திரன் பிருகு. இவர் தன் தந்தையிடம், "பிரம்மம் என்றால் என்ன?" என்று வினவினார். தந்தையோ, "அதனைத் தவம் செய்து நீயே அறிந்து கொள்" என்று கூறுகிறார்.

  அதன்படிச் சிறிது காலம் தவம் செய்த பிருகு முனிவர் தந்தையிடம் வந்து "அன்னமே பிரம்மம். அன்னம் தான் உயிர்களைத் தோற்றுவிக்கிறது, வாழ்விக்கிறது, மடியும் உயிர்கட்கு மறுரூபம் தருகிறது" என்றார். தந்தையோ அவர் கூற்றை ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை. "மேலும் தவம் செய்க" என்று மட்டுமே கூறினார். மீண்டும் தவம் செய்த பிருகு, "பிராணன் உள்ள வரை தானே அன்னத்தினால் வளரும் உடலுக்கு மதிப்பு? உலகைத் தாங்குவதும் வாழ்விப்பதும் ப்ராணசக்தியல்லவா? எனவே பிராணனே பிரம்மம்" என்று சொன்னார். தந்தை மேலும் தவம் செய்யத் தூண்டினார். அங்ஙனமே செய்தார் பிருகு. சிறிது காலம் சென்றது. பின் தந்தையிடம், "பிராணனையும் தாண்டி ஜீவிப்பது மனம். எண்ணங்கள் தாமே பிரபஞ்சத்தைப் படைக்கின்றன, எனவே, மனமே பிரம்மம்" என்றார். தந்தை மகனை மீண்டும் தவத்திற்கே அனுப்புகிறார். இம்முறை பிருகு, "பகுத்தறியும் அறிவான விஞ்ஞானமே மனதையும் கட்டுப்படுத்துகிறது, எனவே விஞ்ஞானமே பிரம்மம்" என்கிறார். வழக்கம்போல் மீண்டும் தவத்திற்கே அனுப்புகிறார் வருணபகவான் …

  இன்னும் எவ்வளவு தரம் இதுவே தொடரும் என்று நினைக்கிறீர்களா? இதோ ஆகிவிட்டது.

  இந்த முறை பிருகு ஏதும் அபிப்ராயங்கள் கூறவில்லை. இம்முறை அவருள் ஓர் ஆனந்தம் ஸ்புரித்தது, அதனில் ஈடுபட்டுக் கொண்டே மௌனத்தில் லயித்துவிட்டார் அவர்.

  பிரம்மம் என்பது அறிதல் அல்ல, உணர்தல் என்று நமக்கு அறிவுறுத்தும் உபநிஷத் கதை இது.

  "நான், நான்" என்று நாம் சொல்லும் அந்த நான், யார் அல்லது என்ன? பன்னெடுங்காலமாய்ப் பலரால் பன்னிப் பன்னிக் கேட்கப்படும் கேள்வி இது. பதில்சொல்ல வருகிறது பஞ்சகோசத் தத்துவம். நம்முளும் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என ஐந்து அடுக்குகள் உள்ளன. இவற்றின் உள்ளூறும் உணர்வே, "நான்" என்பர் பெரியர். (பிரம்மம் என்பதே அண்டம் அனைத்தையும் உள்ளடக்கிய மஹா பெரிய "நான்" அல்லவா?")

  இதனைப் பற்றி சிந்திக்க சிந்திக்க, வேறு சில எண்ணங்கள் கவடுவிட்டன. பஞ்ச கோசத்தைக் கொண்டு, பகுத்தறிவதற்கரிய பாரதத்தின் தத்துவத்தை அறியமுயன்றது என் பால உள்ளம். இதயகமலத்தில் உறையும் ஆத்மன் இறைவனாய்க் காட்சிதருவது போல், மஹாபாரதத்தின் மஹோன்னதம் பஞ்சகோசமாய்ப் படர்ந்தது என்னுள்! பஞ்சபாண்டவரே பஞ்சகோசங்கள், பரந்தாமன் க்ருஷ்ணனே அவற்றுள் உறையும் ஆத்மன், அவற்றை அறிக, ஆழ்ந்து உணர்க, உணர்ந்து உயர்க, உயர்ந்து உறைக என்பதே எனக்கு பாரதம் உரைத்த செய்தி.

  உண்மையை அறிந்துரைத்தலும் உளறல் பல கூறி உவப்பதும் அவரவர் செய்த புண்ணியத்தின் அளவு. இந்த சிந்தனைகள் உளறலோ உண்மையோ அறியேன். மஹத்கிருபையால் நான் அறிந்ததை அறிஞர் பார்வைக்கு வைக்க, என்னுடைய எளிய முயற்சி இது. ஆன்றோர் பார்வையில் இவை பட்டு, அவர்களால் அடியேன் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டாலே, அடியேன் தன்யளாவேன்.

  அடிபணிதலுடன் கூடிய அறிமுகம் இது. அன்னமய கோசம் தொடரும்.
  Last edited by renushan; 16-07-2013 at 12:43 PM.

 2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Powered byvBSocial.com and Block Facebook