திருவரங்கத்தந்தாதி 89 கோல வராஹன் குளம்படி பரல் போன்றது குவலயம் !

குளப்படிநெய்யடிசிற்கொத்ததோகொள்ளப்பற்றியதோ
குளப்படியிறிங்கள்சேரரங்காகோலமாயவன்றுன்
குளப்படிகாட்டும்பிறைமறுப்போலொருகோட்டிருந்து
குளப்படியின்னகத்துட்பரல்போன்றகுவலயமே


பதவுரை : குளம் + படி (வெல்லமும் படி அளவு )
குளம் + படி (புஷ்கரிணிப் படி )
குளம் + டி (நெற்றி வடிவம்)
குளம்பு + அடி (குளம்பின் கீழ்)குளப்படியில் சந்திர புஷ்கரிணியின் குளத்தின் படியில்
திங்கள் சேர் அரங்கா சந்திரன் தவம் செய்த ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே !
கோலம் ஆய அன்று மகா வராஹனாய் நீ வந்த போது
உன் குளம் படி காட்டும் உன் நெற்றியின் வடிவத்தைக் காட்டும்
பிறை மறுப் போல் சந்திரனில் உள்ள களங்கம் போல்
ஒரு கோட்டு இருந்து ஒரு மருப்பில் இருந்து
குளம்பு அடியின் குளம்பின் கீழ் உள்ள
அகத்து உள் பரல் போல் பருக்கைக் கற்கள் போன்ற

குவலயம் பூமி
குளம் படி நெய் வெல்லமும் ஒரு படி நெய்யும்
அடிசிற்கு ஒத்ததோ கலந்த உணவு போல் இருந்ததோ ?
கொள்ள பற்றியதோ உண்ண போதுமானதாக இருந்ததோ ?