Announcement

Collapse
No announcement yet.

Hethirajan – Part 1 source : anudinam.org

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Hethirajan – Part 1 source : anudinam.org

    Hethirajan – Part 1 source : anudinam.org




    This article is written by Sri Parthasarathy Swami.

    Hethirajan – is none other than Chakrathazhwar, Sri Sudarshanar

    ஹேதிராஜன் ! யார் என்று நீங்கள் குழம்பவேண்டாம்.“சக்கரமேந்திய கண்ணா!“ என்று பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில், திரௌபதி கதறினாளே ! அந்த சக்ரமேதான் ஹேதிராஜன். எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் வலது கரத்தில் எப்போதும் சுழன்று கொண்டு இருக்-கும் சுதரஸனம். இவருக்கு நேமி, ஆழி என்ற திருநாமங்களும் உண்டு.

    “ஆழியெழச் சங்கும் வில்லுமெழ“ என்று பாடுகிறார் நம்மாழ்வார் தம், திருவாய்மொழியில். பெரியாழ்-வாரோ, “வடிவார்சோதி வலத்-துறையும் சுடராழியும் பல்லாண்டே“ என்று தம்முடைய பல்லாண்டில் இந்த ஹேதிராஜனுக்கும் பல்லாண்டு பாடுகிறார். ஆண்டாளோ, தம் திருப் பாவையில், “ சங்கொடு சக்கிரமேந்தும் தடக்கையன் “ என்று பாடுகிறார்.

    எம்பெருமான் தம் திருக்கரங்களில், பஞ்சாயுதங்கள் எனப்படும் ஐந்து ஆயுதங்களை எப்போதும் தாங்கியுள்ளார். அவை சுதர்ஸனம் எனபோற்றப் படும் சக்ரம், பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கு, ,கௌமோதகீ என்ற கதை, சார்ங்கம் என்ற வில் மற்றும் நந்தகமென்ற வாள். இவைகளை எம்பெரு-மான் தாங்கியிருப்பது அசுரர்களை அழிக்க மட்டுமன்றி தம் பக்தர்களை காப்பதற்கேயாகும். இவற்றில் சதர்ஸனம் எனப்படும் திருவாழியே முதன்-மையானது. காரணம் பக்தர்களைக்காக்க அவன் ஓடோடி வருவான். அது மட்டுமல்ல ஸ்ரீமந்நாராயணன் அதர்மத்தை அழிக்க எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்தின் போதும் இவனும் அவதரித்து எம்பெருமானுக்கு துணை-புரிவான்.

    விஷ்ணு பூஜையில் தன்னை மறந்து இருந்தான் மன்னன் இந்திரத்யும்னன். அப்போது அங்கே வந்தார் துர்வாஸமஹரிஷி. தியானத்தில் லயித்து இருந்த மன்னன் அவர் வந்ததை கவனிக்கவில்லை. மன்னன் மமதையில் தன்னை வரவேற்கவில்லை என்று எண்ணிய முனிவர் அவன் மதம் கொள்ளும் யானையாக பிறக்கக்கடவது என்று சபித்து விட்டார். கண்-விழித்த மன்னன் எதிரில் துர்வாஸரைக் கண்டான். நடந்த தவறுக்கு மன்-னிப்பு கேட்டான். முனிவர் “சாபம் இட்டதை மாற்றமுடியாது. ஆனால் நீர் கஜேந்திரன் என்ற யானையாக பிறப்பீர். ஒரு நாள் உம் காலை ஒரு முதலை கவ்வும் போது நீர் எம்பெருமானை அழைக்க அவர் உம்மை அந்த முதலையிடமிருந்து காப்பாற்றி மோக்ஷம் அருளுவார் “ என்று கூறினார்.

    கூகூ என்ற அரக்கன், அவ்வபோது ஒரு முதலையாக மாறி நீரில் நின்று நித்யஅனுஷ்டானங்களைச் செய்யும் முனிவர்களின் கால்-களைக் கவ்வி சித்ரவதை செய்வது வழக்கம். அதுபோன்று அவன் ஒருமுறை அகத்தியமுனிவரின் காலைக்கவ்விய-போது கோபம் கொண்ட முனிவர் அவன் முதலை-யாகவே மாறக்கடவது என்று சபித்து விட்டார். அரக்கன் தான் விளையாட்டாக செய்த்து வினையாகப்-போய்விட்டதே என்று வருந்தி அவரிடம் மன்னிப்பு கோறினான். முனிவர் அவன் கஜேந்திரன் என்னும் யானையின் காலைக் கவ்வும் போது, மஹாவிஷ்ணுவின் கைசக்கிரத்தால் தலை அறுபட்டு சாபவிமோசனம் கிட்டும் என்று கூறி-விட்டார்.

    கஜேந்திரன் என்ற யானையாக மாறிய மன்னன் தினமும் ஒரு தடாகத்தில் நீராடிவிட்டு அதில் மலர்ந்த ஒரு தாமரை புஷ்பத்தை எம்பெருமான் திருவடிகளில் வைத்து வணங்குவது வழக்கம். அதுபோன்றே அவன் ஒரு நாள் தடாகத்தில் நீராடும் போது முதலையாக இருந்த அந்த அரக்கன் யானையின் காலைக்கவ்வினான். கஜேந்திரன் எவ்வளவு முயன்றும் முத-லையின் பிடியிலிருந்து அவனால் மீள முடியவில்லை. யானைக்கு பலம் நிலத்திலென்றால் முதலைக்கு பலம் நீரில். வேறு வழி அறியாத கஜேந்-திரன் எம்பெருமானின் உதவியை நாடினான் “ ஆதிமூலமே “என்று கதறி. பக்தனின் குரல்கேட்ட ஸ்ரீமந் நாராயணன் உடனே தம் வாகனமான கருத்-மான் மீது அமர்ந்து தடாகம் இருக்கும் இடத்தை நெருங்கு முன்னறே அவர் கையிலிருந்த சக்ரம் சுழன்று வந்து முதலையின் கழுத்தை அறுத்- த்து. கஜேந்திரனின் சாபம் நீங்கி வைகுந்தம் அடைந்தான்.

    அந்த துர்வாஸமுனிவரை சுதர்ஸனாழ்வார் விடுவதாக இல்லைபோலும். ஒருசமயம் அவரைஓடவோட விரட்டியடித்தார். எதற்காக மேலே படி-யுங்கள். அம்பரீஷன் என்ற மன்னன் தவறாது ஏகாதசி விரதம் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி பூஜைகளை முடித்துக்கொண்டு பின் ஒரு அதிதியுடன் தம் துவாதஸி பாரணை செய்வது வழக்கம்.

    அதுபோன்று ஒரு ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் அவன் பூஜைகளை முடித்து விட்டு இருந்த சமயம் துர்வாஸ முனிவர் அவன் அரண்மனைக்கு வந்தார். அவனுக்கு மிக சந்தோஷம் இன்று தன்னுடன் விருந்து உண்ண ஒரு மகரிஷி வந்திருப்பதால் ! அவரை அவன் தன்னுடன் துவாதஸி உணவு உண்ணலாம் என்று வேண்டிக்கொண்-டான். அவரோ தாம் நீராடிவிட்டு வருவதாகக்கூறி சென்று விட்டார். வெகுநேரமாகியும் அவர் திரும்ப வில்லை. இன்னும் சில நிமிடங்களே இருந்தன துவாதஸி முடிய. மன்னன் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தான். துவாதஸி கழிவதற்குள் பாரணை செய்ய வில்லையென்ரால் அவன் இதுநாள் இருந்த ஏகாதசி விரதங்களுக்கு பலன் இல்லாமலே போய்விடும். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபோது சில வயது முதிர்நத-வர்கள் “ மன்னா தாங்கள் துளஸி தீர்த்தத்தை மட்டும் அருந்தி உங்கள் விரதத்தை முடித்துக்கொள்ளுங்கள். முனிவர் வந்த பிறகு அவருடன் சேர்ந்து உணவு உண்ணலாம் அதனால் எந்த கோஷமும் வந்து விடாது அதே நேரத்தில் நீங்கள் விரதம் இருந்த பலனும் கிட்டும் “ எ ன்று கூற, மன்னனும் அவர்கள் வாக்கை வேதவாக்காக கொண்டு துளஸி தீர்த்தத்தை அருந்தி தன் விரதத்தை முடித்துக் கொண்டு முனிவரின் வருகைக்காகக்- காத்திருந்தான். காலதாமதம் கழித்து வந்த முனிவருக்கு அவருடைய ஞான திருஷ்டியினால் மன்னன் துளஸி நீரைப்பருகித் தம் விரதத்தை முடித்துக்கொண்டது தெரிய வந்தது. கேட்கவேண்டுமா துர்வாஸரின் கோபத்திற்கு அவர் வெகுண்டார் “ மன்னா நீ செய்தது அநியாயம். என்னை விட்டுவிட்டு நீ மட்டுமே எப்படி துளஸி தீர்த்தத்தை அருந்தலாம்இது என்னை அவமதித்ததாகும் “ என்று கடிந்துகொண்டதுடன் மன்னனின் பதிலுக்குக்கூட காத்திராமள் தன் தலை மயிரை கிள்ளிக் கீழேபோட்டு ஏதோவொரு மந்திரத்தை ஜபிக்க அந்த இடத்திலிருந்து ஒரு பூதம் புறப்பட்டு அதை மன்னன் மீதுஏவ அதுமன்னனை துரத்த ஆரம்பித்தது.

    மன்னன் உடனே ஸ்ரீமந்நாராயணனை சரணடையத் தம்மை சரணடைந்த-வர்களை என்றும் கைவிடாத எம்பெருமானும் தன் கையிலிருந்த சுடரா-ழியை ஏவினார். ஹேதிராஜன் விடுவானா தம் பக்தர்களுக்கு தீங்கிழை-க்க எண்ணுபவர்களை! உடனே சுழன்று சென்று பூதத்தைக் கொன்றதுடன் துர்வாஸரைத் துரத்தத்தொடங்கியது முனிவர் அபயம்தேடி பிரம்ம லோகம் சென்றார். பிரம்மன் இந்த விஷயத்தில் தாம் எதுவுமே செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். பின்பு முனிவர், கைலாயம் சென்று சிவனிடம் தம்மை காப்பாற்றுமாறு வேண்ட அவரோ இது நாரா-யணன் சம்மந்தப்பட்ட விஷயம் அதில் நான் தலையிட மாட்டேன். விஷ்-ணுவிடமே சென்று மன்னிப்புகேளும் என்று கூறிவிட, முனிவர் வேறு வழி யின்றி வைகுந்தம் சென்று எம்பெருமானை சரணடைந்தார். அவரோ என் பக்தனுக்கு நேர்ந்த அவமானத்தை தாங்காத சுடராழியையே சரணமடை-யும் என்று கூற முனிவர் முனிவர் வேறு வழியின்றி நேமியின் திருப்பாத-ங்களைப் பற்றினார். அவரோ “ நீர் மன்னனுக்குச் செய்த அவமானத்தை எம்மால் தாங்கமுடியாது. வேண்டுமென்றால் மன்னனிடம் சென்று மன்-னிப்பு கேளுங்கள், அவர் உம்மை மன்னித்துவிட்டதாகக்கூறினால் உம்மை விட்டுவிடுகின்றேன் “ என்று கூற, முனி-வரும் மன்னனிடமேச் சென்று அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்னரே ஹேதிராஜன் எம்பெருமானின் திருக்கரத்தில் சென்று அமர்ந்தார்.


    to be contd…!


    Last edited by sridharv1946; 17-07-13, 16:26.
Working...
X