Announcement

Collapse
No announcement yet.

மணியோசை-3 courtesy: Poigaiadiyan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மணியோசை-3 courtesy: Poigaiadiyan

    மணியோசை-3 courtesy: Poigaiadiyan

    வேருவொரு சமயம், ஒருஸந்யாஸி, ஸ்வாமி களிடம் வாதம் செய்யவந்தான். அவன் வாதத்தில் தோற்றான். அதனால் கோபமுற்ற வனாக, சில கெட்ட மந்திரங்களின் உதவியால் அவற்றை ஜபித்து குளத்து நீரை ஒருகை எடுத்துப் பருகினான்.

    உடனே நம் ஸ்வாமியின் வயிறு பெருக்க ஆரம்பித்தது. அவரால் உபாதையை தாங்க முடியவில்லை. அதன் காரணத்தை உணர்ந்தவராக, எதிருலிருந்த ஒரு கம்பத்தில் ஒரு கோடு இழுத்தார்.

    என்னே ஆச்சர்யம் அவர் வயிற்றிலிருந்த ஜலம் கம்பத்தின் வழியாக வெளியேற அவர் வயிறும் முன்போல ஆனது. இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த ஸந்யாஸி ஸ்வாமியின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டுனான்.

    விஜயநகரத்து மன்னனின் மகளைப் பீடித்திருந்த ப்ரஹ்மராக்ஷஸை வித்யாரண்யர் விரட்டியதால் மன்னனின் அரஸசபையில் அத்யக்ஷகரானார். அப்போது தம் நண்பரான தூப்புல் மணி உஞ்சவ்ருத்தி செய்து, ஜீவனம் நடத்துவதாகக்கேள்வியுற்று வருந்தியதுடன் அவருக்கு உதவும் எண்ணத்துடன், விஜயநகரத்திற்கு வந்துவிடும்படி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில், “ப்ரஸித்தி பெற்ற தூப்புல்குல திலகமே! அடியேன் மூலம் தேவரீருடைய கீர்த் தியை மஹாராஜா அறிந்து, தங்களை நேரில் தரிசிக்க விழைகிறார். தேவரீரை தனத்தால் ஆராதித்து உம் வாயிலிருந்து வரும் அம்ருதத்தில் திளைக்க ஆசைப் படுகின்றார். ஆகையால் தாங்கள் சிஷ்யர்களுடன் விஜயநகரத்திற்கு எழுந்தருளி மஹாராஜாவையும், தங்களிடம் அன்புகொண்ட அடியேனை யும் மகிழ்விக்க வேண்டுகின்றேன்.“ என்று எழுதியிருந்தார். அந்தக்கடிதத்தைப் படித்த ஸ்வாமிகள் அதற்கு, “ க்ஷோணீகோண “ என்ற ஸ்லோகத்தை பதிலாக எழுதியனுப்பினார். அதில், “ இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின் றனர். அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை. அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை. பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம். அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன். குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?“ என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள்.

    சிலகாலம் கழித்து மற்றுமொரு கடிதம் அனுப்பி வைத்தார் வித்யா-ரண்யர். அதனையும் படித்துவிட்டு, நம் ஸ்வாமிகள், ஐந்து ஸ்லோக-ங்களை பதிலாக அனுப்பி வைத்தார். அந்த ஐந்து ஸ்லோகங்களே “ வைராக்ய பஞ்சகம் “ எனப்படும்.

    அந்த ஸ்லோகங்களின் பொருளைச் சுருக்கமாக கீழே அனுபவிக்கலாம்.

    1. ஒருவன் உண்ண உணவும், குடிக்கநீரும், உடுக்க உடையும் வேண்டி அரசனை அண்டி வாழ வேண்டுமென்பதில்லை. நிலங்களில் சிதறி கிடக்கும் நெல்மணிகளும், குளத்துநீரும், வீதியில் கிடக்கும் கந்தல் ஆடைகளுமே போதும்.

    2. சமுத்ரத்திலுள்ள படபாக்நி போல் நம் வயிற்றில் உள்ள ஜாடராக்நி விருத்தியடைந்து பசிதாகத்தால் நாம் பீடிக்கப்பட்டாலும் மாலையில் தானாக மலரும் மல்லிகையின் வாசம் போன்ற நறுமணம் கொண்ட நம் வாக்கினால் அரசர்களிடம் ஒருபோதும் யாசிக்கமாட்டோம்.


    3. அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த கருமை நிற கண்ணன் என்கின்ற தனம், நமக்கு நிறைய இருக்கின்றது. அந்த தனம் குறைவில்லாதது ஆகும். ஆகவே துஷ்டர்களான அரசர்களின் வாசல் திண்ணையில் தனத்திற்காகத் துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம். அரியை துதித்து உடன் கிடைக்கும் தனமே சிறந்தது. சிவ, ஸநகாதி களால் த்யானம் செய்யவும் முடியாத எம்பெருமான் என்ற தனம், எப்போதும் கிட்டும். அதற்கு விடையென்ன என்று கூறுகின்றோம் கேளும்.

    4. அரசர்களின் பெரும் தனம் நம் பசி, தாகங்களைத் தற்காலிகமாகப் போக்கக் கூடியதே. நம் மரண பர்யந்தம் அவர்கள் தனத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடிய கஷ்டத்தை அது அளிக்கும். ஆகவே அது ப்யோஜன மற்றது. நம்மால் துதிக்கப்படும் பகவான் என்கின்ற தனம் தனஞ்ஜெயனுக்கு கீதையை உபதேஸித்து மேன் மையை உண்டுபண்ணியது. ஆகவே பகவானாகிற தனம் கோவர்தன கிரியைத்தூக்கி, கோபர்களையும், கோக்களையும் ரக்ஷித்தது. மேலும் தன்னை அண்டிய தேவர்களையும், வித்வான்களையும் ஸந்தோஷப் படுத்தக்கூடியது. ஆகையால் பகவான் என்கின்ற தனமே மிக உயர் ந்தது. சொந்தமாக சம்பாதித்தோ இல்லை பரம்பரை சொத்தோ இருந் தால் இவ்விதம் அரசர்களின் உதவியை அலக்ஷியப் படுத்தலாம். ஒன்றுமே இல்லாது உஞ்சவிர்த்தி செய்யும் நாம் இப்படி பேசலாகாது என எண்ணவேண்டாம்.

    5. நாம் சம்பாதிப்பதோ, நம் முன்னோர்கள் சம்பாதித்தது என்றோ எதுவுமில்லை. நம் பிதாமஹர் ( ப்ரஹ்மா ) ஸம்பாதித்த தனம் ஒருவராலும் அபஹரிக்கமுடியாதது. அது அத்திகிரியில் இருக்கின்றது. அதாவது ப்ரஹ்மனின் யாகத்தில் அவதரித்த பேரருளாளனே நமக்குப் பெரிய தனம்.

    இப்படி ஸ்வாமி வைராக்யத்துடன் வாழ்க்கையை நடத்திவந்தது எல்லோரும் அறிந்த ஒன்றே. இவர் கஷ்டத்தை நீக்க விரும்பிய ஒரு பெரும் தனவந்தர், சில தங்க மணிகளை ( அவைநெல் மணி களைப்போன்றே காணப்படும் ) தாமிடும் பிக்ஷையுடன் கலந்து ஸ்வாமிகள் உஞ்சவிர்த்திக்கு வரும்போது அவருக்கு அளித்தார். ஆனால் ஸ்வாமிகளோ அதனை கவனிக்காமல், தம் தேவியாரிடம் தந்து அமுது செய்யும் படிக் கூறினார். தேவிகள் செம்பிலிருந்த தான்யங் களைக் கீழே சேர்த்தபோது தங்கமணி களும் கலந்திருப்பதைப்பார்த்தார்.

    ஆனால் அதுவரை அந்த அம்மையார் அதுபோன்ற தங்க மணிகளைப்-பார்த்ததேயில்லையாதலால் பயந்து போய் ஸ்வாமிகளை அழைத்து, “ இன்று பிக்ஷையுடன் பள பளப்பாக ஏதோ த்ரவியமும் கலந்து இருக்-கிறது சற்றுவந்து பாருங்களேன் “ என்று அழைக்க, ஸ்வாமிகள் வந்து பார்த்துவிட்டு “ அவைபுழுக்கள் “ என்று கூறிவிட்டு, ஒருகுச்சியால் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி னார். ஆகவே தேவியார், ஸ்வா-மிகள் அருளிச்செய்த நவரத்னமாலை, மும்மணிக்கோவையையுமே தமக்கு விலையுயர்ந்த ஆபரணங்களாகக் கருதி வாழ்ந்துவந்தார்.

    நம் ஸ்வாமிகளின் அறிவுத்திறனைக்கண்டு அஸூயைக்கொண்ட சிலர் ஒரு ப்ரஹ்மசாரியிடம் “ நீ திருமணம் செய்துகொள்ள பணம் வேண்டு-மென்றால் நீ வேங்கடநாதனிடம் சென்றுகேள். அவர் தங்காசுகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்.“ என்று கூறி அவனை அவனிடம் அனுப்பி வைத்தனர்.

    அந்த ப்ரஹ்மசாரியும், அதுபோன்றே ஸ்வாமிகளிடம் சென்று உதவி கேட்க, அவரும் அதன் பிண்ணணியை அறிந்த வராக பெருந்தேவித் தாயாரைக் குறித்து “ ஸ்ரீஸ்துதி “ என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்ய வானத்திலிருந்து தங்கக் காசுகள் மழையென வானிலிருந்து பொழிந்தது. அதனை அந்த ப்ரஹ்மசாரியும் தன் மேல் உத்ரியத்தில் பிடித்துக்கொண்டான். பிறகு ஸ்வாமிகளைத் தண்டன் சமர்ப்பித்துவிட்டு அவற்றை எடுத்துச் சென்றான். இதனைப்பார்த்த அந்த விரோதிகள் அனைவரும் தலை கவிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற வித்யாரண்யருக்கு ஸ்வாமிகளிடம் பன்மடங்கு மதிப்பு வளர்ந்தது.

    ஒருசமயம், சில அத்வைதிக வித்வான்கள் கூட்டமாக ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்து, “ ராமாநுஜஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டும் இல்லை யெனில் அத்யயன உத்ஸவத்தை நடத்தக்கூடாது, எங்கள் மதத்தில் சேர்ந்து விடவேண்டும் “ என்று கோஷமிட்டனர். ஸ்ரீரங்கவாஸிகளான ஸுதர்ஸன பட்டர் போன்றவர்கள் வயோதிகர்களாக ஆகிவிட்டபடியால், பெருமாள் கோயிலக்கு எழுந்தருளியிருந்த நம் ஸ்வாமிகளுக்கு ஸுதர் ஸன பட்டர் “ தேவரீர் உடனே புறப்பட்டு திருவரங்கம் எழுந்தருள வேண்டும். இது ஸ்ரீரங்கநாதனுடைய ஸேநாபதியின் சாஸனம் “ என்ற ஓலையை அனுப்பி வைக்க, ஸ்வாமிகளும் பேரருளாளன் நியமனம் பெற்று, திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

    வடத்திருக்காவேரியில் நித்ய கர்மாநுஷ் டானங் களை முடித்து கொண்டு கோயிலுக்கு எழுந்தருளி னார். ஸ்வாமிகள் எழுந்த ருளிய செய்தி கேள்வியுற்ற கோயில் நிர்வாகிகள் அவரு க்கு, பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர். ஸ்ரீ ரங்கநாச்சியாரை ஸேவித்து ப்ரதக்ஷணமாக வந்து ஸ்ரீரங் கநாதன் ஸந்நிதிக்கு எழுந்தருளினார். அமலனாதிபிரான் பாசுரத் தைச் சொல்லி பெருமாளை பாதாதிகேசம் ஸேவித்து, தீர்த்த ப்ரஸா தங்களை ஸ்வீகரித்துக் கொண்டார். ஸந்நிதிக்கு வெளியில், பெரிய மண்டபத்தில் ஸுதர்ஸனபட்டர் முத லானவர்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அத்வைத வித்வான்கள், ஸ்வாமி களுடன் வாதம் செய்ய ஆரம் பித்தனர். ஸ்வாமிக்கும் அவர்களுக் கும் ஏழுநாட்கள் வாதம் நடந்தது. எட்டாவது நாள் ஸ்வாமிகள் வாதத்தில் வென்றார்.

    இந்த வாதங்களை தினதோறும் வீரவல்லிபெருமாளையன் என்பவர் கேட்டு இரவு வேளை அவற்றை எழுதிமுடித்து, எட்டாவது நாள் வாதம் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் அவற்றைக் காண்பித்தார். ஸ்வாமிகளும் அவற்றைக் கடாக்ஷித்து, “ ஸததூஷணி “ என்று பெயரிட்டார். அந்த அத்வைத வித்வான்கள் ஸ்வாமிகளிடம் அடிபடிந்தனர். ஸ்வாமிகளும் ஸ்ரீரங்கநாதன் நியமனப்படி அங்கேயே எழுந்தருளியிருந்து காலக்ஷேபங்களை சாதித்து வந்தார்.
    இவர் செய்தருளிய ஸ்ரீபாஷ்ய ப்ரவசனத்தைக் கண்டு பெரியபெருமாள் மனமுவந்து, “ வேதாந்தசார்யர் “ என அழைத்தார். ஸ்ரீரங்கநாச்சியாரும் தம்பங்கிற்கு, “ ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் “
    என்ற விருதை வழங்கினார். இவற்றைக்கேள்வியுற்ற ஸுதர்ஸனபட்டர் முதலானோர் மிக சந்தோஷ
    மடைந்தனர். இப்படி திவ்ய தம்பதிகளின் அனுக்ரஹத்தை நம் ஸ்வா மிகள் பெற்றார். ஸ்வாமிகளின் வைபவத்தைக்கேள்வியுற்ற உள்ளூர், வெளியூர் வாசிகள் வந்து அவரை வணங்க ஆரம்பித்தனர். நம் வேதா ந்த தேசிகர், பெரிய பெருமாள் விஷயமாக “ பகவத்யான ஸோபனத் தையும் “ மற்றும், “ பூஸ்துதி” “தசாவதாரஸ்தோத்ரத்தையும்”அருளிச் செய்தார்.

    சித்திரை மாதம் திருவாதிரை நன்னாளில் எம்பெருமானார் விஷயமாக ” யதிராஜ ஸப்ததி “ யை அருளிச்செய்தார். பின்பு உடையவர் நியமனப் படி, தத்த்வ முக்தாகலாபம், அதற்கு வ்யாக்யானமாக ஸர்வார்த்த ஸித்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், ந்யாய பரிசுத்தி, ஸேஸ்வர மீமாம்ஸை, மீமாம்ஸபாதுகை, தத்த்வபீடிகை, அதிகரணஸாராவளி, கீதாபாஷ்ய விவரணமாக தாத்பர்யசந்த்ரிகை, ஈசாவாஸ்ய உபநிஷத் பாஷ்யம், ஸச்ச ரித்ர ரக்ஷை, ந்யாஸவிம்ஸதி, ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை, கீதார்த்த ஸங்க் ரஹ ரக்ஷை, நிக்ஷேபரக்ஷை, மேலும் கத்யத்ரயம், ஸதுஸ்லோகி, ஸ்தோ த்ர ரத்னத்திற்கும் வ்யாக்யானமான ரஹஸ்யரக்ஷை ஆகிய க்ரந் தங்களை அருளிச் செய்தார்.இவற்றைக் கேட்டு உகந்த ஸுதர்ஸன பட் டர் முதலான பெரியவர்கள் நம் ஸ்வாமிக்கு “ கவிதார்க்கிக ஸிம் ஹம் “ என்ற விருதை வழங்கி கௌரவித்தனர்.
    விஜயநகரத்தில் அக்ஷோப்ய முனிக்கும், வித்யாரண்யருக்கும் வேதாந்த த்தில் விவாதம் நடைபெற்றது. இருவருடைய வாதங்களையும் பத்தி ரிகை மூலமாக தேசிகனுக்கு அனுப்பி வைத்தனர். அதில், ” எங்களில் யாரு டைய வாதம் சரியானது, என்று நிர்ண யம் செய்து அனுப்ப வேண் டும் ” என்று கேட்டிருந்தார். அதன்படி ஸ்வாமி களும் படித்துப்பார்த்து, அக்ஷோப்ய முனியே ஜெயித்ததாக ஒரு ஸ்லோ கத்தின் மூலம் எழுதியனு ப்பினார். வித்யாரண்யர் நம் ஸ்வாமிக்கு பால்ய சிநேகிதராக இருந்தும் பக்ஷபாதமின்றி முடிவு கூறியது கேட்டு மன்னன் ஸந்தோஷ மடைந்தான். வித்யாரண்யர் மிக கோபம் கொண்டு ஸததூஷணியை அனுப்பிவைத்தால் அதனைப்படித்து அதிலுள்ள குற்ற ங்குறைகளை சுட்டிக் காட்டி பதில் அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதி யனுப்பினார். உடனே ஸ்வாமியும் அனுப்பிவைக்க, அதனை நன்கு பரிசோதித்துப் பார்த்து ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாது போன தால், அதன் தலையில் ஒரு புள்ளியைக்குத்தித் திருப்பியனுப்பினார். அதனையும் ஸ்வாமி கடாக்ஷித்து “சகாரஸமர்த்தநம்” என்ற க்ரந்தத்தைச் செய்து முன்பு வித்யாரண்யர் இட்ட புள்ளியின் பக்கத்தில் மற்றொரு புள்ளியை யும் வைத்து இரண்டையும் வித்யாரண்யருக்கு அனுப்பிவைத்தார். அவரும் அதனைப் பார்த்துவிட்டு, “ விஷ்ணுவின் கண்டாம்ஸரான ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரை நான் ஜெயிக்க வல்ல வனோ “ என்று சொல்லியனுப்பினார். அன்றுமுதல் நம் ஸ்வாமிகளிடம் அதிக பக்தியுள்ளவராக மாறினார்.

    கிருஷ்ணமிச்ரர் என்பவர் நம் ஸ்வாமியின் பெயரையும், புகழையும், ஸஹிக்காதவராய் வாதத்திற்கு அழைத்தார். மூன்றுநாட்கள் நடந்த வாதத்தில் நம் ஸ்வாமிகள்தான் ஜெயித்தார் என்று சொல்லவும் வேண் டுமோ ! பிறகு அவர் தாம் எழுதிய “ ப்ரபோத சந்த்ரோதயம் “என்னும் நாடகத்தை எழுதி அவரிடம் கடாக்ஷிக்க அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமியும் அதை கடாக்ஷித்து “ஸங்கல்ப ஸூர்யோதயம்” என்ற நாடகத்தை எழுதி அவருக்கு அளித்தார். கிருஷ்ணமிச்ரரும் மிகவும் சந்தோஷமடைந்தார். ஸுதர்ஸன பட்டர் முதலானவர்கள் சந்த்ரோதயத்தை பார்த்தவுடன் அதற்கு பதிலளிக்குமுகமாக ஸங்கல்ப ஸூர்யோதயம் எழுதியது கண்டுவியந்தனர்.

    கிருஷ்ணமிச்ரர் தோற்று போனதைக் கேள்வியுற்ற, டிண்டிமர் என்ற மற்றுமொரு பண்டிதர் நம் ஸ்வாமியுடன் வாதிட வந்தார். அதுமட்டு மல்ல நான் ஒரு மஹா பண்டிதன் பல ராஜசபைகளிலுள்ள பல பண்டி தர்களை வென்றிருப்பவன் அப்படியிருக்க ஒரு சிறுவன் தன்னைப் பண்டிதன் என்று இங்கு கூறிக்கொண்டு இருக்கிறானாமே. அவன் தைரியமிருந்தால் என்னுடன் வாதத்திற்கு வரட்டும் என்று கோஷ மிட்டுக் கொண்டே வந்தார். ஆனால் நம் ஸ்வாமியோ இவன் கோஷத்தைக்கண்டு பயப்படவேண்டாம். உள்ளே புகுந்து பார்த்தால் ஒரு எழுத்தும் கிடைக்காது. அது அவர் பெயரிலிருந்தே தெரிகிறது. “ டிண்டிரம் “என்றால் கடல் நுரை. கடல் நுரையைத்தொட்டாலே உடைந்துவிடும். டிண்டிரத்திற்கும், டிண்டிமனுக்கும் என்ன பேதம் இருக்கப்போகிறது என்று பொருள்பட “ நிரக்ஷர்ருக்ஷி “ என்று பொருள்படும் ஸ்லோகத்தைச் செய்து பதிலாகத்தந்தார். பிறகு இருவருக்கும் வாதம் நடந்தது. டிண்டிமர் தோற்றார். பிறகு அவர் தாம் செய்த “ ராகவாப்யுதம் “ என்ற காவ்யத்தை நம் ஸ்வாமிகளிடம் தந்து கடாக்ஷிக்க வேண்டினார். அதனைக் கடாக்ஷித்த ஸ்வாமிகளும், “ யாதவாப்யுதம் “ அருளினார். ஸ்வாமிகளின் கவிதா சாமரத்தியத்தை டிண்டிமர் கண்டு வாய்பிளந்தார்.

    பிறகு ஸ்வாமிகள் தென்தேஸத்திலுள்ள திருமாலிருஞ்சோலை,
    to be cont..!
    courtesy: Poigaiadiyan
Working...
X