Announcement

Collapse
No announcement yet.

மணியோசை-4 Courtesy:Poigaiadiyan Source:http://poigaiadia.blogspot.in/2013/06/blog-post_3711.html

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மணியோசை-4 Courtesy:Poigaiadiyan Source:http://poigaiadia.blogspot.in/2013/06/blog-post_3711.html

    மணியோசை-4 Courtesy:Poigaiadiyan Source:http://poigaiadia.blogspot.in/2013/06/blog-post_3711.html

    பிறகு ஸ்வாமிகள் தென்தேஸத்திலுள்ள திருமாலிருஞ்சோலை,

    திருக்கோட்டியூர் முதலிய திவ்யதேஸங்களுக்கு எழுந்தருளி பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துசேர்ந்தார்.

    அங்கு பெரியாழ்வார், ரங்கமன்னார், ஆண்டாள் எல்லோரையும் மங்களாசாஸனம் செய்தவர் “ கோதாஸ்துதி “ யும் அருளிச்செய்தார். அங்கிருந்து ஆழ்வார் திருநகரி எழுந்தருளி ஆழ்வாரை தரிசித்த பின்னர் திருவரங்கம் திரும்பி அங்கிருந்து பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

    சில அஸூயை பிடித்தவர்கள் பேச்சைக்கேட்டு, ஒரு பாம்பாட்டி நம் ஸ்வாமிகளிடம் வந்தான். மந்த்ரத்தால் என்னை ஜெயித்தால், நீர் ஸர்வதந்த்ர ஸ்வந்த்ரர் என்ற பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்.
    இல்லாவிடில் அதனை விட்டு விடவேண்டுமென்று அட்டகாசம் செய்-தான். தமக்கு சமமில்லாத அவனுடன் அவர் பேச மறுத்தார். ஆனால் சிஷ்யர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, அவனை ஜெயிக்க திருவுள்ளம் கொண்டார். கீழே ஏழு கோடுகளை இட்டு அதன் மீது தாம் உட் கார்ந்து கொண்டார். பாம்பாட்டி ஒரு கொடிய நாகத்தை அவர்மீது ஏவினான். அந்த நாகத்தால் முதல் கோட்டைக்கூட தாண்ட முடிய வில்லை. பின்பு அதைவிட கொடிய நாகத்தை ஏவினான். அதுவோ முதல் இரண்டு கோடுகளைத் தாண் டியவுடன் சுருண்டது. கடைசீயில் அவன் கோபத்துடன் “ சங்க பாலன் “ என்ற பெரிய விஷப் பாம்பை ஏவினான். அது ஏழுகோடுகளையும் தாண்டி சீறிபாய்ந்தது. ஸ்வாமி, “ கருடதண்டக” த்தை அருளி வைநதேயனை ஸ்தோத்ரம் செய்திட என்னே ஆச்சரயம்! எல்லோர் கண் முன்பு, வானத்திலி ருந்து பறந்து வந்த ஒரு கருடன் சங்க பாலனைக் கவ்விச் சென்றது. பாம்பாட்டி தன் தலையைத் தாழ்த்தி வணங்கித் தவற்றிர்க்கு மன்னிப்புக்கோறி தன் சங்க பாலனை மீட்டுத்தரும்படி வேண்டினான். ஸ்வாமிகளும் அவன் நிலையைக் கண்டு பரிதாபப் பட்டு
    , “
    கருடபஞ்சாசத் “ அருளி கருத்மானை ப்ரார்த் திக்க அவரும் சங்க பாலனை திருப்பித்தந்தார். இதனை சுற்றி யிருந்து பார்த்த அனைவரும் வியந்து, மகிழ்ந்தனர் .

    வேங்கடநாதனுக்கு திவஹீந்த்ரபரத்தில் வாசம் செய்யவேண்டுமென்ற அவா எழவே, காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டார். திருக்கோயிலூர் சமீபம் வந்தவருக்கு, தளிகைசெய்து பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வழியில்லாமல் போகவே ஹயக்ரீவருக்கு, தீர்த்தத்தை மட்டுமே ஸமர்பித்து, அதை தாமும் ஸ்வீகரித்துக்கொண்டார். அன்று இரவு ஒரு வைச்யன் வீட்டுத்திண்ணையில் படுத்துக் கொண்டார். ஆகாரம் ஏதும் உட்கொள்ளாததாலும், வெகுதூரம் நடந்துவந்த களைப்பாலும் நன்றாக உறங்கிப்போனார். அப்போது என்னே ஆச்சர்யம் ஒரு வெள்ளைக் குதிரை வைச்யன் வீட்டுத்திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கடலைமூட்டை யிருந்த கடலைகளை தின்ன ஆரம்பித்தது. சபதம் கேட்டு வெளியே வந்த வைச்யன் எவ்வளவு விரட்டியும் அந்தக் குதிரை சிறிதும் நகரவில்லை. அவன் உறங்கிக்கொண்டிருந்த ஸ்வாமி களை எழுப்பி, “ ஐயா, உங்கள் குதி ரையை பிடித் துக் கட்டு ங்கள். அது கடலை முழு வதையும் தின்றுவிடப் போகிறது.” என்றான். இதைக்கேட்ட ஸ்வாமிகள், ஆச்சர்யத்துடன், “ உங்கள் வீட்டில் பால் இருந்தால் கொண்டு வாருங்கள் “ என்றதும், அவனும் கொண்டு வந்தான்.

    அதை ஸ்வாமிகள் ஹயக்ரீவருக்கு, நைவேத்யம் செய்து, பகவானுக்கு நிவேதனம் செய்ததைத் தானும்பருகி அதை அந்த வெள்ளைக்குதிரைக்கும் கொடுத்தார். அதை பருகிவிட்டு பின் அது மாயமாய் மறைந்து போனது. அதனைக்கண்கூடாகக் கண்ட வைச்யன் மிகவும் சந்தோஷப்பட்டு, தாம் பெரும்பாக்யம் செய்திருப் பதாகவும் கூறி, ஆராதன த்திற்கு வேண்டிய த்ரவ்யங்களையும் ஸ்வாமி களிடம் தந்து அவரை வழியனுப்பி வைத்தான்.

    பிறகு, திருக்கோயிலூர் வழியாக திருவஹீந்த்ரபுரம் சென்றடைந்தார். அங்கு சிஷ்யர்களுக்கு,வேதாந்த க்ரந்தங்களை உபதேஸித்துக் கொண்டிருந்தார். அப்போது சில துஷ் டர்கள், ஒரு கொத்த னாருக்கு பணம் கொடுத்து, அவனை ஸ்வாமிகளை வம் பிற்கு அழைக்கச் செய்தனர். அவனும் ஸ்வாமிகளிடம் சென்று, “ நீரே ஒரு கிணற்றை வெட்டிக்கட்டி னால் தான் உம்மை ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும். ஸர் வமும் தங்களுக்குத் தெரிந்தி ருக்க வேண்டாமா ? “ என்றதும் ஸ்வாமிகளும், ஹயக்ரீவனுக்கு ஒரு கிணறு வெட்ட சம்மதித்து, அந்தக் கொத்தனார் கொடுத்தக் கற்களைக்கொண்டே அழகிய தோர் கிணறு வெட்டினார்.

    அந்த கொத்தனாரும் வெட்கித் தலைகவிழ்ந்தார். பிறகு ஸ்வாமிகள்

    வீரநாராயணபுரம், திருவாலி முதலிய தலங்களுக்கு எழுந்தருளி நாதமுனிகளையும், திருமங்கை ஆழ்வாரையும் சேவித்துக்கொண்டு ஸ்ரீரங்கம் எழுந்தருளினார்.

    குறைந்த ஞானமேயுள்ள சில ஸாதுக்கள், நாங்களும் அறியும் வண்ணம் சில க்ரந்தங் களை அருளிச்செய்ய வேண்டும் என்று கேட்க, ஸ்வாமிக ளும் அதற்கு சம்மதித்தார். புருஷார்த்தத்தை அடைய உபாயம் வேண்டும், உபாயத்தையறிய ததத்வம் தெரியவேண்டும், தத்வஞானம் உண்டாக ஒருஸதாச்சார்யன் வேண்டும். ஸதாச்சார்யனுக்கு ஸம்ப்ரதாய சுத்தி வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு முதன்முதலில், ஸம்ப்ரதாய பரிசுத்தி என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தை அருளிச்செய்தார்.

    பின்பு தத்வ பதவீ, ரஹஸ்யபதவீ, தத்வநவநீதம், ரஹஸ்யநவநீதம், தத்வமாத்ருகை, ரஹஸ்ய மாத்ருகை, தத்வரத்னாவளீ, ரஹஸ்யரத்னாவளீ, ரஹஸ்ய ரத்னாவளீஹ்ருதயம், தத்வத்ரயசுளகம், ஸாரஸங்க்ஷேபம், ஸாரஸாரம், அபயப்ரதானஸாரம், தத்வசிகாமணி, ரஹஸ்யசிகாமணி, அஞ்சலி வைபவம், ப்ரதான ஸதகம், உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், பரமபதஸோபானம், ஆகிய ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச்செய்து அவர்களுக்கு உபதேஸித்தார்.

    ஸ்வாமிதேசிகன் திருவடிகளில் முதன்முதலில் ஆச்ரயித்த வீரவல்லி பெருமாளைய்யன் என்பவர் விரக்தராய் தாம் ஸந்யாஸம் பெற்று கொள்ள விரும்பினார். ஸ்வாமியும் சம்மதித்தாயிற்று. அவருக்கு பேரருளாள ஜீயர் என்று நாமம் சூட்டப்பட்டது. அதுபோன்றே வீரவல்லி கிருஷ்ணமாச்சாரிக்கு வெண்ணைக்கூத்த ஜீயர் என்றும், கோமாண் டூரப்பனுக்கு ப்ரபாகரஜீயர் என்ற திருநாமங்களும் சூட்டப்பட்டது.

    ஸ்வாமிகளின் எளிமையான உபதேஸங் கண்டுகளித்த பிள்ளை லோகாச்சாரியர் ஸ்வாமிகளிடம் ஸ்ரீபாஷ்ய க்ரந்தங்களை காலக்ஷேபம் பண்ணினார். அப்போது ஸ்வாமிகளின் க்ரந்தங்களைப் பாராட்டும் முகமாக :

    சீரொன்று தூப்புல் திருவேங்கட முடையான்

    பாரொன்றுச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று

    தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு

    வானேறப் போமளவும் வாழ்வு.

    என்று ஒரு பாசுரமிட்டு மகிழ்ந்தார். இந்த பாசுரமே இப்போது ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபங்களின்போது, தனியனாக அனுஸந்தானம் செய்யப்படு வது வழக்கத்திலுள்ளது.

    பிள்ளைலோகாச்சாரியர், ஸ்வாமிகளிடம் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் பண்ணி வருவதைக் கண்டு பொறாத சிலர் ஸ்வாமிகளை வாதத்திற்கு அழைத்தனர். யதிராஜர் அருளிய ஸ்ரீபாஷ்ய க்ரந்தங்களை,அதிகரித்துள்ள ப்ரஹ்ம வித்துக்களான ஸ்ரீவைஷ்ணவர்களுடன் நாம் வாதம் செய்ய தயாரில்லை என்று ஸ்வாமிகள் சொன்னதும், அவரால் தங்களை ஜெயி க்கமுடியாது என்று முடிசெய்தவர்களாக, தாங்களே ஜெயித்ததாக அறி வித்துக் கொண்டு தங்கள் பாதரக்ஷைகளை ஸ்வாமிகள் இல்லத்தின்முன் கட்டினர்.

    கர்மாவலம்பகா : கேசித், கேசித், ஜ்ஞாநாவலம்பாகா : I

    வயம்து ஹரிதாஸானாம் பாதரக்ஷாவல்பாகா : II

    “ சிலர் கர்மயோகத்தை, சிலர் ஞானயோகத்தை அநுஷ்டிப்பவர்கள். நாம் விஷ்ணுபக்தர்களின் பாதரக்ஷைகளை அவலம்பிப்பவர்கள்.”

    என்று கூறியபடி, ஸ்வாமிகள் முகமலர்ச்சியுடன் வீற்றிருந்தார் தம் வீட்டுவாசலில். ஸ்வாமிகளின் ஆத்ம குணத்தைக்கண்ட அந்த அஸூயை கொண்டவர்கள் வெட்கித்தலை கவிழ்ந்தனர்.
    பின்பு ஒருநாள் அநந்தஸூரிகளின் ச்ரார்தம் வந்தது. அதற்கு மூன்று ஸ்வாமிகளை முன்னமே ப்ரார்த்தித்து இருந்தார். ஆனால் சில பொறாமை பிடித்தவர்கள் ச்ரார்த தினத்தன்று காலை அந்த மூவருக்கும் நிறம்ப பணம் தந்து, ஸ்வாமிகள் இல்லத்திற்குச்செல்லாமல் தடுக்க முயன்றனர். ஆனால் அந்த மூவரும் அவர்கள் பேச்சைக்கேளாமல் போனதால் அவர்கள் மீது ஒரு மந்தரப் பொடியைத் தூவி அவர்கள் புத்தியை பேதலிக்கச்செய்து அவர்களை ஆகாரம் உட்கொள்ள வைத் தனர். மேலும் பேரருளாள ஜீயர் முதலானவர்களுக்கும் சரீரத்தில் வியாதி உண்டாகும்படி செய்து அவர்களையும் ஸ்வாமிகள் இல்லத் திற்கு போகமுடியாமல் தடுத்ததுடன் தள்ளியிருந்து நடப்பதை வேடி க்கைப்பார்க்க காத்திருந்தனர். ஸ்வாமிகளும் எதா காலத்தில் தீர்த்தா மாடி, திருவாராதனங்களை செய்துவிட்டு, ச்ரார்தத்தை ஆரம்பித்தார். ஹோமங்களைச்செய்து கூர்ச்சத்தில் தேவ, பித்ரு, விஷ்ணுவை ஆவா ஹனம் செய்து வரித்து ச்ரார்தத்தை செய்து கொண்டிருந்தார்.

    பின்பு இலையில் பகவத் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம், பக்ஷ்யங்கள் ஆகியவற்றை பரிமாறினார். விஷ்ணு ஸூக்திகளை ஜபிக்க ஆரம்பித்தார். என்னே ஆச்சர்யம் ! சில நிமிடங்களில் இலையில் பரிமாற பட்டவை யாவும் மிச்சமின்றி உண்ணப்பட்டு இருந்தது. கடைசீயில் “ ஸகலம் ஸம்பூர்ணம் “ என்ற ஒலிகேட்டது. உத்வாஸநாதிகளைச் செய்ததும் மூன்று ஸ்வாமிகள் அஸூயை கொண்டவர்கள் முன்பாக தாம்பூலம் போட்டுக்கொண்டபடிச் சென்றனர். ஸ்வாமிகள் பிண்டதாநாதிகளை செய்து ச்ரார்தத்தை பூர்த்தி செய்தார். அந்த அஸூயைப் பிடித்தவர்கள், ஸ்வாமிகளிடம் வந்து, “ இன்று ச்ரார்தத்தில் அந்வயித்த வர்கள் யார் என்று கேட்க “, “ கோயில், திருமலை, பெருமாள்கோயில் எம்பெருமான்கள் “ என்று பதிலளித்தனர். இதனைக்கேட்டு பயந்த அவர்கள் ஸ்வாமிகளின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பு கோறினர்.

    அன்று ஏகாதசி தினம். சில கெட்டவர்களின் பேச்சைக்கேட்டு அர்ச்சகர் ஒருவர், ஸ்வாமி பெரிய பெருமாளை மங்களா சாஸனம் பண்ணியதும், அவரிடம் வெண் பொங்கலைக் கொடுத்து, இதை உண்ண வேண்டும். “ இது பகவானின் நியமனம் “. என்று கூற, அதைப்பெற்றுக் கொண்ட ஸ்வாமி “ ச்ருதி, ஸ்ம்ருதிகள் எமது ஆஜ்ஞை. அவற்றில் கூறியபடி நடக்கவேண்டும். அவ்விதம் நடக்காதவன் த்ரோகி. அவன் என் பக்தனானாலும், வைஷ்ணவனல்லன் என்று முன்பு நீரே கூறியிருக்கிறீர் ப்ரபோ ரங்கநாதா, இப்போது .அதற்கு எதிராக சாப்பிடும்படி நியமித்தது சரியா? “.என்று கேட்டதும் பெரியபெருமாள், வேறொரு அர்ச்கர்மீது ஆவேசித்து, “ நாம் அதுபோல் நியமிக்கவில்லை “. என்று சொல்லசிறிய லாபத்திற்காக தாம் அபசாரப் பட்டதற்கு மன்னிக்கவேண்டுமென்று மண்டியிட்டார் பொங்கல் கொடுத்த அர்ச்சகர்.

    வேறொரு சமயம்,ஒரு கவிதா சாதுர்ய முடையவர், ஸ்ரீரங்கநாதன் முன்பு ஸ்வாமிகளைப்பார்த்து, “ ஓர் இரவில் ஓராயிரம் ச்லோகங்களை செய்பவரே கவிதார்கிக ஸிம்ஹம் என்ற விருதிற்கு தகுதியுள்ளவர். நான் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக பதகமல ஸஹஸ்ரம் எழுதப் போகி றேன்.“ என்று சொல்லி போட்டிக்கு அழைத்தார். நம் ஸ்வாமிகளும் பாதுகா ஸஹஸ்ரத்தை எழுதுவதாக ஒப்புக்கொண்டார். இரண்டாவது ஜாமத்திலேயே 1008 ச்லோகங்களைக்கொண்ட ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர த்தை எழுதி முடித்தார். மூன்றாவது ஜாமத்தில் யோகத்திற்கு எழுந்த ருளினார். நான்கவது ஜாமத்தில் வழக்கப்படி எழுந்து, நித்ய கர்மாக் களைச் செய்ய ஆரம்பித்தார். அநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தை பெருமாள் திருவடி களில் சமர்பித்தார்.

    பதகமல ஸஹஸ்ரத்தை செய்வதாக வாக்களித் தவர் 300 ச்லோகங்களே தாம் செய்திருப்பதாகச்சொல்லி தலை கவிழ்ந்தார். அப்போது ஸ்வாமி,
    ஸுதே ஸுகரயுவதி :
    ஸுதஸமதமபி அத்யந்த துர்ப்பகம் ஜடிதி
    கரீணி சிராய ஸுதே ஸகலமஹீ பாலலாலிதம் கலபகம் I I
    “ பன்றி நூற்றுக்கணக்கான கன்றுகளை ஈன்றெடுக்கின்றது. எல்லா அரசர்களாலும் கொண்டாடப்படும் குட்டியை யானை, பன்னிரண்டு ஆண்டுகளன்றோ கர்பத்தில் வைத்திருந்து பெற்றெடுக்கின்றது.” என்று பொருள்பட அருளினார்.
    ஆபாதசூடம் அநபர்யிரு தர்ஸநே அஸ்மிந்
    ஆசாஸநீயமபரம் ந விபக்ஷ ஹே தோ : I
    ஆபாத சாந்தி மதுராந் புநரஸ்மதீயாந்
    அந்யோந்ய வைரஜநநீ விஜஹாத்வஸுயா I I
    ராமாநுஜதர்சனம் அடிமுதல் நுனிவரை தோஷமில்லாதது. மற்றவர்களு க்குச் சொல்ல வேண்டிய சமாதானம் இனி ஒன்றுமில்லை. சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லியாயிற்று. மிகவும் சாந்தரகளான நமக்குள் விரோதத்தை உண்டுபண்ணும் அஸூயை நம்மை விட்டு விலகட்டும். என்று விண்ணப்பித்துக் கொண்டார். மேலும் பல க்ரந்தங்களை அருளிச்செய்தார்.


    நம்மாழ்வார் நியமனப்படி த்ரமிடோபநிஷத்ஸாரம், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, நிகமப்பரிமளம், ஆகிய க்ரந்தங்களை அருளிச் செய்தார். அமலநாதிபிரான் பாசுரங்களுக்கு, முநிவாஹன போகத்தை யும்; கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்களுக்கு, மதுரகவிஹ்ருதயம்; என் பனவற்றையும் அருளிச்செய்தார். திருமந்த்ர சுருக்கு, த்வயச்ருக்கு, சர்மஸ்லோக ச்ருக்கு கீதார்த்த ஸங்க்ரஹ ச்ருக்கு, ஆகார நியமம் முதலியவற்றையும் செய்தார்.

    இவருடைய பெருமை வட மாநிலங்களிலும் பரவ, ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிகளில் பக்தி கொண்ட மாதவனுடைய பிள்ளை, ஸர்வஜ்ஞ சிங் கப்ப நாயக்கர் சில வைஷ்ணவர்களை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பித் தமக்கு நல்லுபதேஸம் செய்தருள வேண்டுமென்று ப்ரார்த்திக்க, ஸ்வாமிகளும் “ ஸ்வாதீந த்ரிவித சேதநாசேத ஸ்வரூபஸ்திதி ப்வர்த்தி பேதம் “ என்று ஆளவந்தாரும், எம்பெருமானாரும் அருளிச்செய்த வாக்யங்களின் விரி வாக, தத்வ ஸந்தேஸத்தை அருளிச்செய்தார். மேலும் ரஹஸ்ய ஸந்தேசவிவரணம், ஸுபாஷிதநீவி, இவற்றை அருளிச்செய்து கொடுத்த னுப்பினார். அவ்வரசன் ஸ்வாமிகளின் ஸ்ரீமுகத்தை எல்லா மரியாதை களுடன் எதிர்கொண்டு வந்து ஏற்று அவற்றை சேவித்து ஸ்வாமியின் நியமனப்படி சரணாகதியை செய்துகொண்டு ஸ்வாமிகளின் திருவடி களில் அசஞ்சலமான பக்தி கொண்டவனாக வாழ்ந்து வந்தான்.

    ஸ்ரீஸ்வாமி தேசிகனுக்கு, பல ஆண்டுகளாக குழந்தையே இல்லாமல் இருந்தது. பேரருளாளன் அநுக்ரஹத்தால் நளவருஷம், ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை க்கு, ஜாதகர்மா செய்து வைக்கப் பட்டு “ வரதன் “ என்ற நாமம் சூட்டப் பட்டது. குமாரன் வரதாச்சாரிக்கு, அக்ஷராப்யாஸம் செய்து, எல்லா சாஸ்த்ரார்கங்களையும், மந்த்ரார்த்தங்களையும் தாமே உபதேஸித்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ? அவர் குமாரரும், அதிமேதாவியாக விளங்கினார். மகனுக்கு விபவ ஆண்டு ஸ்ரீபாஷ்ய க்ரந்தத்தை உபதேஸி த்தார். அப்போது குமாரர் வரதாச்சாரியார்,
    ஸ்ரீமாந் வேங்க நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ I
    வேதாந்தாத்சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி I I
    என்ற தனியனை விண்ணப்பித்து சேவித்தார். அப்போது அருகிலிருந்த ஸுதர்ஸனபட்டர் மற்றுமுள்ளவர்களும் அதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற னர். இனி இந்த தனியனையே உச்சரிக்க வேண்டுமென்றும் ஒருமனதாகத் தீர்மானித்தனர். ஆனால் அதுநாள்வரை ஸ்வாமியின் ப்ரதான சீடரான வீரவல்லி பெருமாளய்யன் அருளிய :
    நம : பதம் இதம்பூயாத் தஸ்மை வேங்கட ஸூரயே I
    யத்வாகம் க்ருதஸேகேந ஸஞ்சீவித மிதம் ஜகத் I I
    என்ற தனியனையே பயன் படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிட வேண் டிய ஒன்று. எங்கனம் எம்பெருமானாரின் ஜ்ஞான புத்ரனான திருக் குரு கைப் பிள்ளானிடம் கூரத்தாழ்வார் போன்றவர்கள் பக்தியுள்ள வர்களாக இருந்தார்களோ, அதுபோன்றே பேரருளாள ஜீயர் போன்றவர்கள் ஸ்வாமி களின் குமாரரிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்தார்கள்.

    ஒரு சமயம் கந்தாடை லக்ஷ்மணாச்சார்யர் என்பவர் பல்லக்கில் ஸ்வா மிகள் வஸிக்கும் வீதி வழியாக வந்துகொண்டு இருந்தார். அவர் ஒரு ஆச்சார்ய புருஷர். அப்போது ஸ்வாமிகள் தம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார். அவர் தாம் படித்துக்கொண்டிருந்த க்ரந்தத்தில் லயித்திருந்ததால், வீதியில் என்ன நடக்கின்றது என்பதை அறியவில்லை, இதனைக்கண்ட லக்ஷ்மணாச்சார்யரின் சீடன் ஒருவன் ஷ்வாமிகளிடம் ஓடிவந்து, “ எங்கள் ஆச்சார்யர் வீதியில் பல்லக்கில் எழுந்தருளும் போது உட்கார்ந்திருக்கின்றீரே ? உமக்கு கண்ணில்லையா ?“ என்று சொல்லிவிட்டு அவர் கால்களைப்பிடித்திழுத்து, கீழே தள்ளிவிட்டு சென்றான். ஸ்வாமிகள் மிக சிரப்பட்டு எழுந்திருந்து, லக்ஷ்மணாச்சார்யர் இருக்குமிடம் வந்து தம்மை மன்னிக்கும் படி கைகூப்பி வணங்கி விட்டு மீண்டும் தம் வீட்டுக்குத்திரும்பினார். அன்றே ஸ்ரீரங்கத்தைவிட்டுத் தம் குடும் பத்தினருடன், திருநாராயணபுரம் புறப்பட்டார்.

    வழியில் சத்யாகாலத்தில் காவேரியில் தீர்த்தாமாடி விட்டு, காவேரிக்கரையிலுள்ள வரதராஜ பெருமாள் சந்நிதியில் வஸிக்க ஆரம்பித்தார்.
    தம் சிஷ்யர்கள் அபசாரப்பட்டதால், ஸ்வாமி ஸ்ரீரங்க த்தை விட்டே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பதை லக்ஷ்மணாச்சார்யர் அறியமாட்டார். அவர் உடலில் “ வைவர்ணம் “என்ற வியாதியின் கொடுமை அதிகமாக இருந்தது. தம் சக்தியை இழந்தார். அவருக்கு புத்ரபாக்யமும் கிடையாது. அகாலத்தில் தமக்கு மரணம் நேர்ந்துவிடுமோ என்று பயந்தார். அவர் மனைவி, தம் கணவனிடம், “ உம் உடம்பில் வைவர்ணம் வர ஏதாவது பாகவத அபச்சாரம் நேரிட்டதா ? ” என்று கேட்டவுடன், அவர் “ யாம் புத்தி பூர்வமாக ஏதும் செய்யவில்லை.“ என்று சொன்னவர், “சிஷ்ய பாபம் குரோபி” என்று இருப்பதால், சிஷ்யர்களில் எவராவது அபச்சாரம் செய்திருப் பார்களோ என்ற சந்தேஹத்தில் அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டபோது, ஒருவன் “ நம் ஆச்சார்யர் வீதியில் வரும்போது எழுந்திருந்து மறியாதை செய்யாது புத்தகம் படித்துக்கொண்டிருந்த வேதாந்த தேசிகரை கீழே தள்ளி னோம். அவர் அன்றே இந்த ஊரைவிட்டு போய்விட்டார் “ என்றான்.

    இதனைக் கேட்டதும் தம்பதிகள் மூர்ச்சை அடைந்தனர். பிறகு அவர்களே தெளிந்து எழுந்து, “ பீடாகரன் என்று பெயர் கொண்ட உனக்கு பொருத்த மானதே “ என்று அந்த சிஷ்யனைக் கடிந்துகொண்டு, ஸ்வாமிகள் இருக்கு மிடம் அறிந்து உடனே புறப்பட்டு சத்யமங்கலம் சென்று ஸ்வாமிகளை தண்டம் சமர்பித்து நின்றனர். தேசிகன், “ இங்கு எதற்காக வந்தீர்கள்? தேவரீர் திருமேனியில் வைவர்ணம் வரக்காரணமென்ன?” என்று கேட்டதும் லக்ஷ்மணாச்சார் வருத்தத்துடன், “ என் சிஷ்யர்களில் ஒருவன் உம்மிடம் பட்ட அபச்சாரத்திற்கு, கிடைத்த தண்டனை இது. அடியேனை மன்னித் தருள வேண்டும். மேலும் ஒருவருடகாலம் உம் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்க நிச்சயித்துள்ளோம். “ என்று கூறி அதுபோன்றே வாழ்ந்துவர, அவர் வ்யாதி குணமாயிற்று. லக்ஷ்மணாச்சார்யர் மனைவியும் கர்ப முற்றார்.

    ஒருவருஷம் கழிந்ததும், ஸ்வாமிகளை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே வரவேண்டுமென ப்ரார்த்தித்துவிட்டு அவர்கள் ஸ்ரீரங்கம் திரும்பிச் சென் றனர். சிலமாதங்கள் கழித்து அந்த தம்பதிகளுக்கு, ஸ்வாமிகளின் ஸ்ரீபாத தீர்த்த மகிமையால் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தீர்த்த பிள்ளை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தம்தகப்பனாரின் பெயருடன் ஸ்வாமி களின் திருப்பெயரையும் சேர்த்து, “ ஆயிஆழ்வான்பிள்ளை “ என்ற பெயரும் சூட்டினர்.
    சத்யமங்கலத்திலிருந்த ஸ்வாமிகளுக்கு, ஒருநாள் ரங்கநாதனை சேவிக்க வேண்டுமென்ற எண்ணம் எழவே தம் குமாரரையும், மனைவியையும் சத்ய மங்கலத்திலேயே விட்டுவிட்டு, பேரருளாள ஜீயர் முதலானவர்களுடன் திருவரங்கம் திரும்பினார். வெகுநாட்கள் விட்டு பிரிந்த தாபம் தீர,
    பெரு மாளை சேவித்து மகிழ்ந்தார். அங்கு தங்கியிருந்தபோது, ஒரு வித்வான் தேசிகனிடம் வந்து, வேதாந்த வாக்யார்த்தம் சொல்ல வந்திருப்பதாகச் சொன்னார். ஸ்வாமிகள் பேரருளாள ஜீயரை அழைத்து நீர் அவரிடம் வேதாந்த வாக்யார்த்தம் சொல்லவும் என பணித்தார்.
    அதன்படியே மஹாவித்வானிடம் சததூஷணி முதலிய க்ரந்தங்களைக் கொண்டு வாதம் செய்து மூன்று நாட்களில் அவரை வென்றார். ஸ்வாமிகளிடம் வந்து தண்டம் சமர்பித்துத் தாம் வாதம் செய்த விதத்தை விவரித்தார். அதனைக்கேட்ட ஸ்வாமிகள், “ நீர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் “ என்றார்.அதுமுதல் பேரருளாளஜீயர் அங்கனமே அழைக்கப்பட்டார்.


    அந்தசமயம், அந்த தேஸத்தில் துருக்கர்களுடைய உபத்ரவம் அதிகமாக இருந்தது. அதனால் கோயில் அதிகாரிகள் பெரிய பெருமாள் முன்பாக ஒரு கல்திரையை எழுப்பி ஏதோ ஒரு விக்ரஹத்தை முன்பாக வைத்துவிட்டு, அழகியமணவாளப் பெரு மாளையும், நாச்சிமார்களையும் திருவேங்கடத்தில் எழுந்தருளப் பண் ணினர். துருக்கர்சேனை அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஹிம்ஸித்து வந்தது. அப்போது ஸுதர்ஸனபட்டர் தேசிகனிடம், ஸ்ருத ப்ரகாசி யைக்கொடுத்து, “ இதை சோதித்தருள வேண்டும். அது உம்மாலேயே ப்ரவசனம் பண்ணி ப்ரசுரமாக வேண்டும் “ என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, தம் இரு குமாரர்களையும் அவரிடம் ஒப்படைத்து “ இவர்களையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறிவிட்டு பெருமாள் பின்னேயே சென்றார். அப்போது துருக் கர்கள் ஸுதர்ஸனபட்டரைக் கொன்று விட்டா ர்கள். ஸ்ரீதேசிகன் ஸ்ருதப்ரகாசி கையைப் பூமியில் புதைத்து விட்டு, தாம் அந்த இரு குழந்தைகளுடன் பிணக்குவியல் மத்தியில் அந்த இரவெல்லாம் படுத்திருந்து, பிறகு அந்தக்ரந்தங்களையும் எடுத்துக்கொண்டு இரு குழந்தைகளுடன் ஸத்யமங்கலம் போய்ச்சேர்ந்தார். பிறகு அவர் ஸ்ருத ப்ரகாசி கையை, தம் சிஷ்யர்களுக்கு உபதேஸித்து வந்தார். ஸுதர்ஸனபட்டர் குமாரர்களுக்கும் உபநயாதி களைச் செய்து வைத்து அவர்களுக்கும் உபதேஸம் செய்துவைத்தார்.

    ஒருசமயம் தம் குடும்த்தினருடனும், சிஷ்யரகளுடனும் திருநாராயண புரம் சென்றார். அங்கு செல்வபிள்ளை, யதுகிரிதாயார், ராமாநுஜர்
    ஆகியோரை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்தார்.
    அப்போது திருநாராயணப்பெருமாள் அர்ச்சகர் முகமாக, “ உமக்குப் பிறகு உமதுமகன் வரதாச் சாரியார் ராமாநுஜ சித்தாந்தத்தை பரப்பக்கடவது. “ என்று சொல்ல ஸ்வாமிகள் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார். அங்கேயே சிலகாலம் தங்கி யிருந்தார். குமாரவரதாச் சாரியாரும், திருநாரா யண புரத்திலேயே
    ,
    பகவத்விஷய காலக்ஷேப ங்களை செய்ய ஆரம்பித்தார். ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் மற்றும் வெண்ணைக்கூத்தஜீயர் முதலானவர்கள் குமாரரிடம் காலக்ஷேபம் கேட்க விழைய, அவர்களுக்கு பஹுதான்ய வருஷம், ஆவணிமாதம், ஹஸ்த நக்ஷத்ர தினத்தில் கவத் விஷய காலக்ஷேபத்தை ஆரம்பித்தார்.
    அப்போதுப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஜீயர் “ ஸ்ரீமல்லக்ஷமண யோகீந்த்ர “ என்ற தநியனையிட்டு ஆரம்பித்தார். பின்பு தேசிகன் விஷயமாக, “ ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: “ என்ற தனியனை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப ஆரம்பத்திலும், “ ராமாநுஜதயாபாத்ரம் “ என்ற தனியனை பகவத்விஷய காலக்ஷே ப ஆர ம்பத்தின்போதும் பயன்படுத்தும்படி நிய மித்தார். அவர் நியமனப்படியே இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிறகு ஸ்வாமிகள், “ நவநவபஹுபோகாம் “ என்ற ஸ்லோகத்தை திருநாராயணன் விஷயமாக அருளிச்செய்து மங்களா சாஸனம் செய்து அங்கிருந்து சத்யமங்கலம் திரும்பினார்.

    அழகிய மணவாளப்பெருமாளை இதுநாட்கள் விட்டுப்பிரிந்திருந்த, துக்கம் தாளாமல், “ அபீஸ்தவம் “ என்ற ஸ்தோத்ர த்தை அருளிச்செய்தார். இதனால் மகிழ்ச்சி யுற்ற ரங்கநாதன் மீண்டும் திருமலையிலி ருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர கோபண்ணராயன் என்ற குறுநில மன்னன் மூலம், அழகியமண வாளனை கொண்டுவரச்செய்து செஞ்சியில் சிலகாலம் ஆராதிக்கவைத்து, பிறகு ஸ்ரீரங்கம் கொண்டுவந்து சேர்க்கச்செய்தார்.

    அழகிய மணவாளன் திரும்பிவந்த செய்திகேட்ட ஸ்வாமிகள் மிக சந்தோஷ மடைந்தார். தம் குடும்பத்தினருடன் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போது சித்ரகூடத்திலிருந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து, தில்லையில் பரஸ்பரம் சண்டை நடந்து கொண்டிருக்கின்றது என்று கூற, இப்போது அரசர்கள் அனுகூலமாக இருந்தால் மீண்டும் கோவிந்தராஜனை அங்கு ப்ரதிஷ்டை செய்யலாம் என்று விண்ணப்பித்தார்.

    பிறகு அந்த செய்தியை கோபண்ணராய ருக்கு, தெரிவிக்க, அவரும் மீண்டும் கோவிந்தராஜனை தில்லையில் கொண்டு வந்து ப்ரதி ஷ்டை செய்தார். தேசிகனும் தில்லைக்குச்சென்று மங்களாசாஸனம் செய்து, கோபண்ணராயருக்கு, நன்றிகூறி விடையளித்துவிட்டு மீண்டும் திருவரங்கம் திரும்பினார். இதனால் தில்லையிலிருந்த சில சைவர்கள், ஸ்வாமிகளிடம் விரோதம் காட்டினார்கள். அவரை பேசவிடாமல் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். ஸ்ரீரங்கம் வந்து, கோயில் அதிகாரிகளை தங்கள் கையில் போட்டுக்கொண்டு, அத்யயன உத்ஸவம் நடைபெற விடா மல் தடுத்தனர். மேலும் க்ஷுத்ர மந்திரத்தைப் பயன்படுத்தி ஸ்வாமி களைவாய்ப் பேசமுடியாமல் செய்தனர். இதனையறிந்த ஸ்வாமிகள், மானசீகமாக த்வய மந்த்ரத்தை ஜபித்து, “ஸ்ரீமதேராமாநுஜாய நம: “ என்று சொல்ல வாய்பேசும் திறனை மீண்டும் பெற்றார். ஸ்வாமிகள் தம்முடைய மஹாமந்த்ர ஸித்தி ப்ரபாவத்தினால் எதிரிகளின் வாயைக்கட்டிப்போட்டார். பின்பு அவர்களிடம் வந்து மன்னிப்பு கோறி ப்ராணபிச்சை கேட்டனர். ஸ்வாமிகளும் அவர்களை மன்னித்து, அவர்களிடமிருந்து, க்ஷுத்ர மந்த் ரத்தை விலகச் செய்தார். கோயில் அதிகாரிகளும் ஸ்வாமிகளிடம் வந்து மன்னிப்புகேட்டு அத்யயன உத்ஸவம் நடைபெற ஏற்பாடு செய்தனர்.

    பிறகு ஸ்வாமிகள் “ ஸாரதீபம் ”, “ விரோதபரிஹாரம் “ என்ற க்ரந்தங்களை அருளிச்செய்தார்.
    ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், திங்கள் முதலியவற்றை விவரிக்கும் ப்ரபந்தஸார த்தை எழுதினார். மாயாமதத்தைச்சேர்ந்த சில்பி ஒருவர் தங்கள் மத த்தை ஸத்தூஷணி முதலிய க்ரந்தங்கள் மூலம் தாக்கியதால் ஸ்வாமிகள்மீது கோபமுற்று, ஸ்வாமிகளை சில்ப சாஸ்த்ரத்தில் வென்றுவிடும் முயற்சியில் இறங்கினர். ” நீர் உண்மையில் ஸர்வந்தர ஸ்வந்த்ரர் எனறால் உம்ப்போலவே ஒரு விக்ரஹத்தை சில்ப லக்ஷண ங்களுடன் செய்து காட்டுங்கள் “ என்று கூற,தேசிகனும் சம்மதிக்க, அன்று இரவு, ஸ்ரீரங்கநாதன் கனவில் தோன்றி “ வலக்கையல் ஞான முத்திரையும், இடக்கையில் ஸ்ரீகோசமும் உடைய வீற்றிருக்கம் கோலத்தில் செய்யக் கடவது “ என்று அனுக்ரஹிக்க, ஸ்வாமிகளும் செய்து முடித்தார்.

    சில்பிகள் அதனைக்கண்டு வியந்தனர். ஸ்வாமி அந்த சில்பியிடமே அதற்குத்தகுந்த பீடமும் செய்யச் சொல்ல அவரும் விக்ரஹத்திற்குத் தகுந்த பீடத்தைச் செய்து காட்டினார். அப்போது விக்ர ஹத்தின் கன்னப்பகுதியில் அதிகமாக இருப்பதாக எண்ணி உளியால் சீவினார். அப்போது விக்ர ஹத்திருமேனியிலிருந்து, இரத் தம் கசிய அதனைக்கண்ட சில்பி பயந்தே போனார். ஸ்வாமிகளின் பாதத்தைப் பணிந்தார். ஸ்வாமிகளும் அவரை சமாதானப்படுத்தி, பின்பு “ சில்பார்த்த ஸாரம் “ என்ற நூலை எழுதினார். அப்போது ஸ்வாமிகளுக்கு, நூறு திருநக்ஷத்ரங்களுக்கு மேல் !
    அளவற்ற பெருமைகளைக் கொண்ட நம் ஸ்வாமிகள் ஸௌம்ய வருஷம் ( 1370 )கார்த்திகை மாதம் பூர்ணிமையில் தம் திருவாராதனப்பெருமாள் பேரருளாளனை யும் அப்பிள்ளார் அளித்திருந்த சுதர்ஸன, பாஞ்சஜன்ய முத்திரைகளை தம் திருக்குமாரரிடம் அளித்து ஆராதித்து வரும்படிக் கூறி, ஸ்ரீஹயக்ரீவரை, ப்ஹ்மதந்த்ர ஸ்வந்தர ஜீயரிடம் அளித்துவிட்டு நேராக வடக்கு திருவீதியிலுள்ள தம் இல்லத்தில் தமது திருமுடியை குமாரர் மடியிலும், ப்ரஹ்மதந்த்ரர் மடியில் பாதங்களையும் வைத்துக்கொண்டு அப்பிள்ளார் திருவடிகளை த்யானித்தபடியே திருநாட்டிற்கு எழுந்தருளினார். குமாரர் வரதாச்சாரியார் –
    கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாணுண ஸாலிநே I
    ஸ்ரீமதே வேங்கடேஸாய வாந்தகுர்ரவே நம : II
    என்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து அவர் சர்மதிருமேனியை சேவித்து பின்பு சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்தி முடித்தார். பின்பு ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி அந்த ஸந்நிதியிலேயே ஸ்ரீதேசிகர் விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தார்.

    அன்று ஒலிக்க ஆரம்பித்த மணியோசை இந்த உலகம் உள்ளளவும் ஒலிக்கும்.
    ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம :

    Courtesy:Poigaiadiyan
    Source:
    http://poigaiadia.blogspot.in/2013/06/blog-post_3711.html
    Last edited by sridharv1946; 17-07-13, 16:49.
Working...
X