திருவரங்கத்தந்தாதி 92/100 சிலம்பில் நின்றான் சிறியேன் புலம்பலை செவியில் சேர்ப்பனா ?
வனத்திற்சிலம்பிவிடுநூலுட்பட்டுமசகமெய்த்த வனத்திற்சிலம்பினபோற்பிணிவாய்ப்பட்டென்வாய்புலம்பின்
வனத்திற்சிலம்பினகுரலன்னம்வாழுமரங்கனிப்பு
வனத்திற்சிலம்பினின்றான்கேட்குமோவும்பர்வாழ்த்தைவிட்டே
பதவுரை : வனத்தில் + சிலம்பி
தவனத்தில் + சிலம்பின
வனத்தில் + சிலம்பின
புவனத்தில் + சிலம்பில்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
வனத்தில் காட்டில்
சிலம்பி விடு நூலுள் பட்டு சிலந்தி வாயிலிருந்து வந்த வலையில் சிக்கி
மசகம் கொசு
மெய் தவனத்தில் சிலம்பின போல் உடல் தவிப்பால் அரற்றியது போல்
பிணி வாய் பட்டு நோயில் அகப்பட்டு
என் வாய் புலம்பின் என்னுடைய வாய் புலம்பினால்
சிலம்பின் குரல் சிலம்பு எனும் ஆபரணத்தால் ஏற்புடும் ஒலியைப் போல்
அன்னம் வாழும் குரலை உடைய அன்னங்கள் வாழும்
அரங்கன் இப்புவனத்தில் ரங்கநாதன் இந்த உலகத்தில்
சிலம்பில் நின்றான் திருவேங்கடத்தில் நின்றவனுமான திருமால்
உம்பர் வாழ்த்தை விட்டு வானவர்கள் ஸ்தோத்ரங்களை கேட்காமல்
கேட்குமோ ( என் புலம்பலை )கேட்பானோ ?
Bookmarks