திருவரங்கத்தந்தாதி 93/100 ஆசை அழிய அரங்கன் அடிகளை அடை !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
விடத்தேரைமன்னும்வனப்பாழ்ங்கிணற்றுள்வெம்பாம்புபற்றும்
விடத்தேரைவாய்வண்டுதேன்வேட்டல்போல்விசித்துக்கொடுபோய்
விடத்தேரையில்வெங்கட்கூற்றையெண்ணாதெண்ணும்வேட்கையெல்லாம்
விடத்தேரையூரரங்கன்றிருத்தாளில்விழுநெஞ்சமே
பதவுரை : விடத்தேரை (மரம்)
விட + தேரை (தவளை)
விட + தேர்(எண்ணும்) + ஐயில்(வேல்)
விட + தேர் (ரதம் )
நெஞ்சமே மனமே !
விடத்தேரை மன்னும் வன விடத்தேரை மரம் உள்ள காட்டில் இருக்கும்
பாழ்ங்கிணற்றுள் பாழடைந்த கிணற்றில்
வெம் பாம்பு பற்றும் கொடிய பாம்பினால் கவ்விக்கொள்ளப்பட்ட
விடத்தேரை வாய் வண்டு நஞ்சு ஏறிய தவளையின் வாயில் உள்ள வண்டு
தேன் வேட்டல் போல் தேனை விரும்புவது போல்
விசித்துக்கோடு போய் விட உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போய் விட
தேர் அயில் எண்ணும் வேல் படையையும்
வெம் கண் கொடும் கண்களை உடைய
கூற்றை எண்ணாது எமனை நினைக்காமல்
எண்ணும் வேட்கை எல்லாம் விட எண்ணுகிற ஆசை எல்லாம் ஒழிய
தேரை ஊர் அர்ஜுனனுக்கு தேரை ஓட்டிய
அரங்கன் ரங்கநாதனுடைய
திருத்தாளில் விழு திருவடிகளில் சேருவாய் !
Bookmarks