திருவரங்கத்தந்தாதி 94/100 ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் !
விழுங்கூன்றசைச்சுவர்நீர்மலங்கோழைவெம்பித்தொடுங்க-
விழுங்கூனரம்புறியென்பேணிதோற்சட்டைவீழ்ந்துநொந்த-
விழுங்கூந்தலாரழப்படையிற்ப்ய்ச்சுடும்வெய்யசெந்தீ
விழுங்கூனநோய்க்குடில்வேண்டேனரங்கவிமானத்தனே
பதவுரை : விழும் + கூன்
கவிழும் + கூன்
அவிழும் + கூந்தல்
விழுங்கு + ஊன்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
அரங்கவிமானத்தனே ஸ்ரீரங்க விமானத்திம் கீழ் பள்ளி கொண்டிருப்பவனே !\
கூன் விழும் கூன் விழக்கொடிய
தசை சுவர் தசையாலான சுவரும் ,
நீர் மலம் கோழை நீர்,மலம்,கோழை ,
வெம் பித்தொடும் கொடிய பித்தம் இவற்றுடன்
கவிழும் கூன் கவிழ்கின்ற பாத்திரமும்
நரம்பு உறி நரம்புகளினால் ஆன உறி ,
என்பு ஏணி எலும்பினாலாகிய ஏணி ,
தோல் சட்டை தோலால் ஆகிய சட்டை கூடிய
அவிழும் கூந்தலார் விரிந்த கூந்தலுடைய பெண்கள்
நொந்து வீழ்ந்து அழ வருந்தி கீழே விழுந்து புலம்ப
பாடையில் போய் பாடையில் எடுத்துப் போய்
சுடும் வெய்ய செம் தீ விழுங்கு சுடுகிற கொடிய சிவந்த தீயால் எரிக்கப்படும்
ஊன நோய் குடில் துன்பக் தரும் நோய் இருக்கும் குடிசையாகிய உடலை
வேண்டேன் விரும்ப மாட்டேன் !
Bookmarks