ப்ரதக்ஷிணம்Click image for larger version. 

Name:	Pradakshinam.jpg 
Views:	6 
Size:	32.8 KB 
ID:	897

தெய்வ வழிபாட்டில் மிக சுலபமான வழி ப்ரதக்ஷிணம் செய்வது ஆகும். இதையே வலம் வருதல், சுற்றி வருதல், என்றும் கூறுவார்கள்.

யாநி காநி ச பாபாநி ஜன்மாந்தர க்ருதாநி ச
தாநி தாநி விநஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

என்பதாக ஆலயங்களில் நாம் ப்ரதக்ஷிணம் செய்யும் பொழுது நாம் வைக்கும் ஒவ்வொரு காலடியும் முன் ஜன்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த ப்ரதக்ஷிணத்தையே ஒரு வ்ரதமாகச் செய்யலாம். ஆஷாட மாத த்வாதசியன்று ( ஸ்ரீ விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி ) 19.07.13 வெள்ளிகிழமை ஆரம்பித்து ஸ்ரீ விஷ்ணு விழித்தெழுந்திருக்கும் கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை 13.11.13 புதன்கிழமை வரை உள்ள காலங்களில் இந்த ப்ரதக்ஷிணத்தைச் செய்யலாம். ஆலயங்களில் காலை, மாலை வேளைகளில் ப்ரதக்ஷிணம் செய்யலாம். அரசமரத்தையும் துளஸியையும் காலையில் தான் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஆண்கள், பெண்கள், குழந்தைகள், அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள், என ஜாதி மதப்பாகுபாடு இன்றி இந்த ப்ரதக்ஷிண வ்ரதத்தைச் செய்யலாம். ஒரு லக்ஷம் தடவை ப்ரதக்ஷிணம் செய்தல் மிக உத்தமம். இயலாதவர்கள் அதில் நான்கில் ஒரு பகுதி 25,000 அல்லது பத்தாயிரம் அல்லது ஓர் ஆயிரம் ப்ரதக்ஷிணமாவது இந்த நான்கு மாதங்களில் செய்வது மிகுந்த பலனை வாரி வழங்கும்.

இந்த வ்ரதத்தை வேத வ்யாஸர் தர்மபுத்ரருக்கு கூறியதாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

இந்த ப்ரதக்ஷிணத்தை அருகில் கோவிலில் உள்ள ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவன் அம்மன், ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களுக்கும் மற்றும் அசுவத்த வ்ருக்ஷம் (அரசமரம்), துளசிச்செடி, பசுமாடு, முதலியவைகளுக்கும் செய்யலாம். ப்ரதக்ஷிணம் செய்யும் போது, நிறைமாத கர்ப்பிணி பெண்ணானவள் தலையில் எண்ணை நிரப்பிய குடத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு மிக மெதுவாக நிதானமாகச் செல்வாளோ, அவ்வாறு நிதானமாக நடந்து ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். ஓடக்கூடாது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ப்ரதக்ஷிணத்தைக் கணக்கிட்டு இந்த நான்கு மாதங்களில் ஒரு லக்ஷம் அல்லது 10 ஆயிரம் அல்லது ஒரு ஆயிரமாவது ப்ரதக்ஷிணம் செய்யலாம். இந்த ப்ரதக்ஷிண வ்ரதத்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்களிலிருந்து நம்மை விடுவித்து, நமது வாழ்க்கையின் லட்சியத்தை அடையலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்ஷப்ரதக்ஷிணம் செய்யும் பொது கொள்ள வேண்டிய ச்லோகங்கள் :-

ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ப்ரதக்ஷிணம் செய்ய :-

अनन्तमव्ययं विष्णुं
लक्ष्मीं नारायणं हरिम् |
जगदीश नमस्तुभ्यं
प्रदक्षिण पदे पदे ||

அனந்தம் அவ்யயம் விஷ்ணும்
லக்ஷ்மீம் நாராயணம் ஹரிம்
ஜகதீஷ நமஸ்துப்யம் ப்ரதக்ஷிந பதே பதே
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ ஆஞ்சநேயரை ப்ரதக்ஷிணம் செய்ய ஸ்லோகம்:-

रामदूत ! महावीर ! रुद्र बीज समुद्भव 1 |
अञ्जना गर्भ सम्भूत ! वायुपुत्र ! नमोस्तु ते ||

ராமதூத ! மகாவீர ! ருத்ர பீஜ ஸமுத்பவ !
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர ! நமோஸ்துதே
------------------------------------------------------------------------------------------------------------------------------
பசுவை ப்ரதக்ஷிணம் செய்ய :-

गवां अङ्गेषु तिष्ठन्ति भुवनानि चतुर्दश |
यस्मात् तस्मात् शिवं मे स्यात् इह लोके परत्र च ||

கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனாநி சதுர்தச
யஸ்மாத் தஸ்மாத் சிவம் மே ஸ்யாத் இஹ லோகே பரத்ர ச
--------------------------------------------------------------------------------------------------------------------------------
துளஸியை ப்ரதக்ஷிணம் செய்ய ச்லோகம் :-

प्रसीद मम देवेशि कृपया परया मुदा |
अभीष्ट सिध्दिं सौभाग्यं कुरु मे माधवप्रिये ||

ப்ரஸீத மம தேவேசி க்ருபயா பரயா முதா
அபீஷ்ட ஸித்தம் சௌபாக்யம் குரு மே மாதவப்ரியே.


Source: chinthamani