திருவரங்கத்தந்தாதி 96 அரங்கனைத் தொழுதால் முத்திஅளித்து துயர் அகற்றுவான் !

அங்காக்கைக்கேமங்கைக்கீந்தானரங்கனவனிக்குவாய்
அங்காக்கைக்கேபசித்தானிற்கவேமுத்தியாக்கித்துயர்-
அங்காக்கைக்கேசிலர்வேறேதொழுவரருந்திரவிய்-
அங்காக்கைக்கேதனத்தாடருமோதிருவன்றியிலே

பதவுரை : அம் + கா + கைக்கே
அங்காக்கைக்கே
துயரம் + காக்கைக்கே
திரவியம் + காக்கை + கேதனம்

அம் கா அழகிய சோலையிலுள்ள பாரிஜாத மரத்தை
மங்கைக்கே தன் மனைவி சத்யபாமாவினுடைய
கைக்கே ஈந்தான் கையில் கொடுத்தவனும்
அவனிக்கு பூமியை உண்பதற்கு
வாய் அங்காக்கைக்கே வாய் திறக்கும் அளவே
பசித்தான் பசியுற்றவவனுமான
அரங்கன் நிற்கவே அரங்கன் இருக்கும்போதே
முத்தி ஆக்கி மோக்ஷம் கொடுத்து
துயரம் காக்கைக்கு துன்பங்களிலிருந்து காப்பதற்காக
வேறே தொழுவர் வேறு தெய்வங்களைத் தொழுவார்கள்
அரும் திரவியம் அருமையான செல்வத்தை
திரு அன்றியிலே மகா லக்ஷ்மி இல்லாமல்
அம காக்கைக் கேதனத்தாள் காக்கைக் கொடியை உடைய மூதேவி
தருமோ கொடுப்பாளோ ?