திருவரங்கத்தந்தாதி 100/100 அரங்கன் அடியை அடைந்தால் அமரர் உலகம் அடையலாம் !
தீரத்தரங்கப்பவநோய்துடைத்தென்னைத்தேவரொடுத்
தீரத்தரங்கப்பணிகாப்பவைத்தசெயலென்பதோர்
தீரத்தரங்கவபயமென்றார்க்குந்திரைப்பொன்னிசூழ்
தீரத்தரங்கன்சிலம்பார்ந்தசெய்யதிருவடியே
பதவுரை : தீர + தரங்க ( முழுவதும் + அலை )
தீரத்தர் + அங்கு (முக்தர்கள் )
ஓர்தீர் + அத்தர் + அங்க (அறிவீர் + தலைவர் + பாகம் )
தீரத்து + அரங்கன் (கரை)
அத்தர் அங்க தலைவர்களான பிரமனையும் சிவனையும் உடலின் அங்கமாய் உடையவனே !
அபயம் என்று ஆர்க்கும் சரணம் என்று ஆரவாரிக்கும்
திரைப்பொன்னி சூழ அலைகளுடைய காவேரி சூழ்ந்து இருக்கும்
தீரத்து அரங்கா கரையை உடைய ரங்கநாதனது
சிலம்பு ஆர்ந்த சிலம்பு அணிந்த
செய்ய திருவடி சிவந்த ஸ்ரீ பாதங்கள்
தரங்கப் பவ நோய் அலைகள் போல் வரும் பிறப்புத் துன்பத்தை
தீர துடைத்து முற்றிலும் ஒழித்து
என்னை அடியேனை
தேவரொடும் தீரத்தர் நித்யர்களொடும் முக்தர்களோடும்
அங்கு வைகுண்டத்தில்
அப்பணி காப்ப கைங்கர்யங்களை செய்யும்படி
வைத்த செயல் ஏற்படுத்திய செய்கையை
ஒர்தீர் அறியுங்கள்
திருவரங்கத்தந்தாதி முற்றிற்று
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
நன்றி :
sridharv1946@gmail.com
Bookmarks