இயற்க்கை வைத்தியம் மருத்துவ டிப்ஸ்:-

மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.
பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும்.

மருத்துவ டிப்ஸ்
உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.
ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.
முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.
சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.
புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.
உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.
கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.
தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.
நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.
அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.
முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.
செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.
கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.
எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.
முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் :
1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.
3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.
4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.
5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதமிழன் சித்த மருந்தகம்